துளுவ நரச நாயக்கன்
விஜயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
துளுவ நரச நாயக்கன் (கி.பி. 1491-1503) விஜயநகரப் பேரரசின் அரசனான சாளுவ நரசிம்ம தேவ ராயனின் கீழ் திறமையான தளபதியாக இருந்தவன். துளுவ நரச நாயக்கன் தந்தையான துளுவ ஈஸ்வரா நாயக்கன், சந்திரகிரியின் சேனாதிபதி.
சாளுவ நரசிம்மனின் இறப்புக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அவனது மூத்தமகனான திம்ம பூபாலன் குறுகிய காலத்திலேயே தளபதி ஒருவனால் கொல்லப்பட்டான். இதனைத் தொடர்ந்து சாளூவ நரசிம்மனின் இரண்டாவது மகனை இரண்டாம் நரசிம்மராயனாக துளுவ நரச நாயக்கன் அரியணை ஏற்றினான். இவன் வயதில் குறைந்த சிறுவனாக இருந்ததால், நரச நாயக்கன் ஆட்சிப் பொறுப்பைத் தானே நடத்திவந்தான். இக்காலம் விஜய நகரப் பேரரசின் சோதனைக் காலமாக விளங்கியது. உள்நாட்டிலும் குழப்பங்கள் மலிந்திருக்க வெளியிலிருந்தும் பேரரசுக்கு ஆபத்துக்கள் நிறைந்திருந்தன. எனினும், நரச நாயக்கன் திறமையாகப் பேரரசை நிர்வகித்தான்.
பஹ்மானி சுல்தான்களையும், கஜபதிகளையும் நாட்டை அணுகவொட்டாமல் வைத்திருந்தான். உள்ளூர்த் தலைவர்கள் பலரிடமிருந்து வந்த எதிர்ப்புக்களையும், பேரரசிலிருந்து விடுதலை பெற அவர்கள் எடுத்த முயற்சிகளையும் முறியடித்தான்.
பொருளடக்கம்
தெற்கில் பெற்ற வெற்றிகள்[தொகு]
1463 ஆம் ஆண்டளவில் சாளுவ நரசிம்மனின் ஆட்சிக்காலத்தில், அவன் தலைநகருக்கு அண்மித்த பகுதிகளில் கவனம் செலுத்தவேண்டி இருந்தபோது, காவிரிக்குத் தெற்கேயிருந்த பகுதிகள் பேரரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிக் கொண்டன. 1496 ஆம் ஆண்டில் தெற்கு நோக்கிப் படையெடுத்த துளுவ நரச நாயக்கன், குழப்பம் விளைவித்த தலைவர்களை அடக்கினான். திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களின் ஆளுநர்களும் இவர்களுள் அடங்குவர். கவிரிக்குத் தெற்கே குமரி முனை வரையான பகுதிகள் அனைத்தையும் நரச நாயக்கன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். சோழ, சேர நாடுகள், மதுரை, ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகியவற்றின் தலைவர்களும், விஜயநகரத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இவ் வெற்றிகள் அனைத்தும் 1497 இல் நிறைவு பெற்ற ஒரே படையெடுப்பிலேயே கிடைத்தன.[1]
1496 இல், கஜபதி அரசன் பிரதாபருத்திரன் விஜயநகரத்தைத் தாக்கினான். எனினும், எவருக்கும் வெற்றி தோல்வியின்றி நகரத்தைப் பாதுகாப்பதில் நரச நாயக்கன் வெற்றி பெற்றான்.
பாமினி சுல்தானக அரசியல்[தொகு]
நரச நாயக்கன் பேரரசை நிலைப்படுத்துவதில் குறியாக இருந்தான். இக் காலத்தில் பஹ்மானி அரசு பல சிறு துண்டுகளாக உடைந்துவிட்டது. காசிம் பாரிட் என்னும் பஹ்மானிய அமைச்சன் பீஜாப்பூர் சுல்தானாகிய யூசுப் ஆதில் கான் என்பவனைத் தோற்கடிப்பதற்காக நரச நாயக்கனிடம் உதவி கோரினான். இதற்காக, ராய்ச்சூர், முட்கல் கோட்டைகளைத் தருவதாகவும் ஒத்துக்கொண்டான்.
நரச நாயக்கன் ராய்ச்சூர் ஆற்ரங்கரைப் பகுதிக்குப் படைகளை அனுப்பி அப்பகுதியை அழித்தான். யூசுப் ஆதில் இப்பகுதியை இழந்தான். திரும்பத் திரும்ப முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. போரில் நரச நாயக்கனை வெல்ல முடியாது என்பதைக் கண்ட யூசுப் ஆதில் கான், அவனைச் சமாதானம் கோரி பீஜாப்பூருக்கு அழைத்தான். அங்கே நரச நாயக்கனையும், எழுபது உயர்நிலை அதிகாரிகளையும் அவன் கொலை செய்வித்தான்.
நரச நாயக்கனின் பணிகள்[தொகு]
தனது ஆட்சியின் இறுதிப் பகுதியை அண்டி, துளுவ நரச நாயக்கன், தனது அரசனான சாளுவ நரசிம்ம தேவ ராயனின், கனவுகளுக்கு வடிவம் கொடுத்தான். நரச நாயக்கன், ஒரு சிறந்த நிர்வாக அமைப்பை உருவாக்கியதுடன், வலுவான படைகளையும் உருவாக்கினான். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்துவந்த எதிர்ப்புக்களை முறியடித்துத் தென்னிந்தியாவின் பெரும் நிலப்பரப்பைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தான். இது, இவனது மகனான கிருஷ்ண தேவ ராயனின் கீழ் விஜயநகரப் பேரரசு அதன் உச்ச நிலையை எட்டுவதற்கு அடிப்படையாக அமைந்தது.