இரண்டாம் ஹரிஹர ராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹரிஹர ராயன் II இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரண்டாம் ஹரிஹர ராயன்
ஆட்சிக்காலம்1377–1404
முன்னையவர்முதலாவது புக்கா ராயன்
பின்னையவர்விருபாட்ச ராயன்
பிறப்பு1342
இறப்பு1404
அரசமரபுசங்கம மரபு
விசயநகரப் பேரரசு
சங்கம மரபு
அரிகர ராயன் I 1336-1356
புக்க ராயன் 1356-1377
அரிகர ராயன் II 1377-1404
விருபாட்ச ராயன் 1404-1405
புக்க ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபாட்ச ராயன் II 1465-1485
பிரவுட ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கர் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ணதேவராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கன் I 1572-1586
வேங்கடன் II 1586-1614
ஸ்ரீரங்கன் II 1614-1614
ராம தேவ ராயன் 1617-1632
வேங்கடன் III 1632-1642
ஸ்ரீரங்கன் III 1642-1646

இரண்டாம் ஹரிஹர ராயன் (Harihara II, கி.பி. 1377-1404), விஜயநகரப் பேரரசை ஆண்ட பேரரசர்களில் ஒருவர். இவர் அப்பேரரசின் மூன்றாவது அரசராவார். விஜயநகரத்தின் முதல் அரச மரபான சங்கம மரபைச் சேர்ந்தவர்.[1] இவருடைய காலத்தில் வேதங்கள் பற்றிய முக்கிய பணிகள் நிறைவடைந்தன. "வைதிகமார்க ஸ்தாபனாச்சார்யா", "வேதமார்க பிரவர்தக" ஆகிய பட்டங்களைப் பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

விஜயநகரப் பேரரசை உருவாக்கிய சகோதரர்களில் இளையவரான புக்கா ராயன் 1377 இல் இறந்த பின்னர் இரண்டாம் ஹரிஹரன் ஆட்சிக்கு வந்தார்.[2] 1404 இல் இறக்கும் வரை ஆட்சியில் இருந்தார். இவருக்குப் பின்னர் விருபாட்ச ராயன் ஆட்சி அமைத்தார்.

அரிகர ராயனின் ஆட்சியின் போது, நெல்லூருக்கும் கலிங்கத்துக்கும் இடையில் ஆந்திராவின் கட்டுப்பாட்டிற்காக கொண்டவீடு ரெட்டிகளுக்கு எதிராகப் போராடியதன் மூலம் அவர் தனது இராச்சியத்தின் எல்லையை விரிவுபடுத்தினார். அரிகர ராயன் கொண்டவீடுவின் ரெட்டிகளிடமிருந்து, அத்தங்கி, சிறீசைலம் பகுதிகளையும், கிருஷ்ணா நதியின் தெற்கே உள்ள தீபகற்பத்திற்கு இடையேயான பெரும்பாலான பகுதிகளையும் கைப்பற்றினார், இது இறுதியில் தெலுங்கானாவில் இரச்சகொண்டாவின் வேலமாக்களுடன் சண்டைக்கு வழிவகுத்தது. அரிகரன் 1378 இல் முசாகித் பகுமானியின் இறப்பைப் பயன்படுத்திக் கொண்டு, கோவா, சாவுல், தபோல் போன்ற துறைமுகங்களைக் கட்டுப்படுத்தி, வடமேற்கு வரை தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தினார்.

இன்று அம்பி என்று பரவலாக அறியப்படும் முன்னைய விஜயநகரை அழிபாட்டுப் பகுதியில் இரண்டாம் அரிகரனுடைய அரண்மனை என்று நம்பப்படும் கட்டிடத்தின் அழிபாடுகளையும் காணலாம்.[3]

அரிகரனின் தளபதி இருகுப்பா ஒரு சைன ஆசிரியரான சிம்மானந்தியின் சீடர் ஆவார். அவர் விஜயநகரத்தில் கும்து-ஜினநாதரின் கற்கோயிலையும் கட்டினார்.[4]

கொண்டவீடு ரெட்டிகளுக்கு எதிரான அவரது போரின் போது, அவர் மைசூர் ஆட்சியையும், மைசூரில் உள்ள டால்வோய்களை எதிர்த்துப் போராடும் பணியையும் யதுராயரிடம் ஒப்படைத்தார், இதன் மூலம் மற்றொரு வலிமைமிக்க எதிர்கால இராச்சியத்தின் முதல் ஆட்சியாளரை நியமித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 103–106. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
  2. Vijayanagara and Bamini Kingdom 2.35
  3. "Palace of Vira Harihara". Archived from the original on 21 சூன் 2010.
  4. Sangave 1981, ப. 46.

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
முதலாவது புக்கா ராயன்
விஜயநகரப் பேரரசு
1377–1404
பின்னர்
விருபட்ச ராயன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ஹரிஹர_ராயன்&oldid=3606678" இலிருந்து மீள்விக்கப்பட்டது