அரவிடு மரபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விஜயநகரப் பேரரசு
சங்கம மரபு
ஹரிஹர ராயன் I 1336-1356
புக்கா ராயன் I 1356-1377
ஹரிஹர ராயன் II 1377-1404
விருபக்ஷ ராயன் 1404-1405
புக்கா ராயன் II 1405-1406
தேவ ராயன் I 1406-1422
ராமச்சந்திர ராயன் 1422
வீரவிஜய புக்கா ராயன் 1422-1424
தேவ ராயன் II 1424-1446
மல்லிகார்ஜுன ராயன் 1446-1465
விருபக்ஷ ராயன் II 1465-1485
பிரௌத ராயன் 1485
சாளுவ மரபு
சாளுவ நரசிம்ம தேவ ராயன் 1485-1491
திம்ம பூபாலன் 1491
நரசிம்ம ராயன் II 1491-1505
துளுவ மரபு
துளுவ நரச நாயக்கன் 1491-1503
வீரநரசிம்ம ராயன் 1503-1509
கிருஷ்ண தேவ ராயன் 1509-1529
அச்சுத தேவ ராயன் 1529-1542
சதாசிவ ராயன் 1542-1570
அரவிடு மரபு
அலிய ராம ராயன் 1542-1565
திருமலை தேவ ராயன் 1565-1572
ஸ்ரீரங்கா I 1572-1586
வெங்கடா II 1586-1614
ஸ்ரீரங்கா II 1614-1614
ராமதேவா 1617-1632
வெங்கடா III 1632-1642
ஸ்ரீரங்கா III 1642-1646

அரவிடு மரபு விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்காவதும், கடைசியுமான மரபு ஆகும். ஆட்சி அதிகாரம் கொண்டிருந்த இம் மரபைச் சேர்ந்த முதலாமவன் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் மருமகனான அலிய ராம ராயன் ஆவான். எனினும் இவன், முந்திய மரபின் கடைசி அரசனுக்காகப் பதில் ஆளுநராகவே செயல்பட்டான். ராமராயன் தலைக்கோட்டைப் போரில் இறந்ததும், அவனது தம்பியாகிய திருமலை தேவ ராயன் அரசனானான். இவனே அரவிடு மரபின் முதல் அரசனாவான். [1] [2]

அரவிடு மரபின் தொடக்கம் விஜயநகரப் பேரரசின் சிதைவின் தொடக்கமாகவும் அமைந்தது. அலிய ராம ராயனைத் தவிர்த்து, இம்மரபைச் சேர்ந்த எழுவர் விஜயநகரத்தை ஆட்சி செய்தனர். விஜயநகரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றபோதும், இவர்கள் ஆட்சி 1652 ஆம் ஆண்டுவரை நீடித்தது. இவர்களில் எவருமே பஹமானி சுல்தான்களின் ஒன்றுபட்ட வலுவைச் முறியடிக்க வல்லவராக இருக்கவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Aravidu dynasty
  2. Vijayanagar Empire: Aravidu Dynasty
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரவிடு_மரபு&oldid=2589842" இருந்து மீள்விக்கப்பட்டது