வீரவிஜய புக்கா ராயன்
Appearance
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
வீரவிஜய புக்கா ராயன் (கி.பி. 1422-1424) விஜயநகரப் பேரரசின் எட்டாவது பேரரசன். சங்கம மரபைச் சேர்ந்த இவன், பேரரசன் முதலாம் தேவ ராயனின் மகன். இவனுக்கு முன் அரசனாக முடிசூட்டிக்கொண்ட இவனது தமையனின் குறுகிய கால ஆட்சியைத் தொடர்ந்து வீரவிஜய புக்கா ராயன் 1422 ஆம் ஆண்டில் பதவியேற்றான். இவனும் குறுகிய காலமே பதவிவகித்தான். போத்துக்கீசப் பயணி நூனிஸ், இவன் ஆறு ஆண்டுகள் ஆண்டதாகக் குறிப்பிட்டிருப்பினும், 1424 ஆம் ஆண்டிலேயே இவனது ஆட்சி முடிவடைந்துவிட்டது. [1]
இவனைத் தொடர்ந்து இவனது மகனான இரண்டாம் தேவ ராயன் ஆட்சிபீடம் ஏறினான்.