வியாசதீர்த்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வியாசதீர்த்தர் துவைத சமயப் பிரிவைப் பற்றி நன்கறிந்த சான்றோர் ஆவார். இவர் வியாசராயர் என்றும் சந்திரிகாசாரியார் என்றும் அழைக்கப்படுகிறார். மெய்யியில் வாதம் செய்யுமளவுக்கு திறன் பெற்றிருந்தார். சோமநாதர் என்னும் புலவர் எழுதிய வியாசயோகிசரிதை என்னும் கவிதைத் திரட்டிற்குப் பிறகே இவரைப் பற்றி உலகம் அறியத் தொடங்கியது. இவர் கருநாட்டகாவில் உள்ள மைசூரில் பிறந்தவர். இவர் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களில் அனுமன் சிலைகளை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கன்னடத்தில் பல பாடல்களை இயற்றியுள்ளார். நியாயமிர்தம், தர்க்கதாண்டவம் ஆகியன இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாசதீர்த்தர்&oldid=2972099" இருந்து மீள்விக்கப்பட்டது