குமார வியாசர்
Appearance
குமார வியாசர் என்பவர் கன்னடக் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் நாரணப்பா என்பதாகும். கன்னடத்தில் மகாபாரதத்தை எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர் கர்நாடகத்தின் கதக் நகரத்திற்கு அருகிலுள்ள கோளீவாடு என்னும் ஊரில் பிறந்தவர். விஜயநகரத்தை ஆண்ட முதலாம் தேவராயரிடம் கணக்கராக இருந்தவர் இவர் தந்தை.
ஆக்கங்கள்
[தொகு]இவர் கர்ணாட பாரத கதாமஞ்சரி என்ற நூலை எழுதினார். இதற்கு கதக்கின் மகாபாரதம் என்று பொருள். இதை கதுகின பாரத, கன்னட பாரத, வியாச பாரத என்றும் குறிப்பிடுவர். ஐராவத என்ற நூலையும் எழுதியுள்ளார்.
சான்றுகள்
[தொகு]- குமார வியாசர் (ஆங்கிலத்தில்)