தெனாலி ராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெனாலி ராமகிருஷ்ணா
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் தெனாலி நகரில் உள்ள தெனாலி ராமகிருஷ்ணர் சிலை
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தின் தெனாலி நகரில் உள்ள தெனாலி ராமகிருஷ்ணர் சிலை
இயற்பெயர்
తెనాలి రామకృష్ణ
பிறப்புகார்லபதி ராமகிருஷ்ணா
16வது நூற்றாண்டு
கார்லபதி, குண்டூர் மாவட்டம் ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தொழில்கவிஞர்
மொழிதெலுங்கு
தேசியம்இந்தியா
வகைசமயம், நாட்டுப்புற இலக்கியம்,
கருப்பொருள்தெலுங்கு இலக்கியம்

தெனாலிராமன் (Tenali Raman) (கி.பி.1480 - கி.பி.1528 ) என்று தமிழ் நகைச்சுவை உலகில் மிகவும் புகழ் பெற்ற தெனாலி ராமகிருஷ்ணா என்பவர் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயனின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப்புலவர்களுள் ( அஷ்டதிக்கஜங்கள் ) ஒருவர்.[1]

ஏழைப் பிராமணர்[தொகு]

தெனாலி ராமன் ஆந்திரப் பிரதேசம் கிருஷ்ணா மாவட்டத்தில் கார்லபதி என்கிற கிராமத்தில் இராமையா – லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனாக ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர்.[2] தெனாலியில் உள்ள இராமலிங்க சுவாமியின் நினைவாக இராமலிங்கன் என்றே பெயரிடப்பட்டார். இவர் பிறந்து மூன்றாம் நாள் இவருடைய தந்தையார் மரணமடைய குடும்பம் வறுமையில் வாடியது. இவருடைய தாயார் இவரை எடுத்துக் கொண்டு தெனாலியில் இருந்த அவருடைய சகோதரனுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தாய்மாமன் ஆதரவில் தான் இராமலிங்கம் வளர்ந்தார்.

அகடவிகட கோமாளித் தனங்கள்[தொகு]

உரிய பருவத்தில் பள்ளியில் சேர்ந்தாலும் படிப்பில் கவனம் செல்லவில்லை. மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் ஆற்றல் அவரிடம் இயற்கையாகவே இருந்தது. அதனால், அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன. கமலா என்கிற பெண்ணை மணந்தார் தெனாலி ராமன்.

விகடகவியாக உயர்ந்தது[தொகு]

இவர் அரசவை விகடகவியாக உயர்ந்தது குறித்து பலகதைகள் நிலவுகின்றன என்று தெனாலிராமன் நினைத்தார்.

இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.[3][4][5]

அதில் நம்பிக்கை வரப்பெற்ற தெனாலிராமன் விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.

உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாகச் செய்தி[தொகு]

உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாகச் செய்தி பரப்ப வைத்து தான் இறந்து விட்டால் அரசர் தன் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள மாட்டார் என்பதை அரசரே உணரும் வண்ணம் செய்து அவரையே தர்மசங்கடப் படுத்தி இருக்கிறார் தெனாலி ராமன். அதனாலேயே நிஜமாகவே பாம்பு கடித்து இறக்கும் தருவாயில் இருந்த தெனாலி ராமன், கடைசியாக அரசரைப் பார்த்து விட எண்ணி அவருக்குத் தகவல் அனுப்பிய போது அவர் அதனை நம்ப மறுத்து விட்டார். அரசரைப் பார்க்காமலேயே உயிர் துறந்தார் தெனாலி ராமன்.

சைவரா? வைணவரா?[தொகு]

இவர் சைவரா வைணவரா என்பதில் சரித்திர ஆசிரியர்களிடையே குழப்பம் நிலவுகிறது. ஏனென்றால் இவருடைய பெயர் சைவப் பெயர். இவர் எழுதிய நூலாகிய “பாண்டுரங்க மகாத்மியம்” விஷ்ணுவைப் பற்றியதாக இருப்பதோடு அவருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளது.

அது தவிர “உத்பாதராதைய சரித்திரம்”, “கடிகாச்சல மகாத்மியம்” ஆகிய நூல்களை இயற்றி உள்ளார். முன்னது உத்பாதர் என்கிற துறவியைப் பற்றியது; பிந்தையது, தமிழகம் வேலூருக்கு அருகில் இருக்கும் நரசிம்மர் கோவிலைப் பற்றியது.

பட்டங்கள்[தொகு]

  • விகடகவி
  • குமார பாரதி

சிறப்புகள்[தொகு]

இந்திய மொழிகளில் இவரைப் பற்றிய பாடக் குறிப்புகள் இல்லாத மொழியே கிடையாது என்னும் அளவுக்குப் பிரபலமானவர். இவருடைய கதையை தி அட்வென்சர்ஸ் ஆஃப் தென்னாலி ராமன் (The Adventures of Tenali Raman) என்கிற பெயரில் கார்ட்டூன் நெட் ஒர்க் தொலைக்காட்சி நிறுவனம் கி.பி.2001-ல் படமாக்கியது.

திரைப்படங்கள்[தொகு]

குறிப்புதவி[தொகு]

  • தென்னிந்திய வரலாறு – நீலகண்ட சாஸ்திரியார்.
  • தெனாலிராமன் கதைகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Neela Subramaniam (200?). Vikatakavi Tenali Rama. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174780713. பார்க்கப்பட்ட நாள் 2017-07-19. {{cite book}}: Check date values in: |date= (help)
  2. T.SUNANDAMMA (2014-01-06). Tenali sharan krishna. பார்க்கப்பட்ட நாள் 2017-07-19.
  3. T.SUNANDAMMA (2014-01-06). Tenali Ramakrishna. p. 3. பார்க்கப்பட்ட நாள் 2017-07-19.
  4. The King and the Clown in South Indian Myth and Poetry (in ஆங்கிலம்). 2016-04-19. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-63368-8.
  5. Tenali Rama, பார்க்கப்பட்ட நாள் 2020-01-29
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெனாலி_ராமன்&oldid=3648392" இலிருந்து மீள்விக்கப்பட்டது