தெனாலி ராமன் (1956 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெனாலி ராமன்
இயக்கம்வி. எஸ். ரங்கா
தயாரிப்புவி. எஸ். ரங்கா விக்ரம் புரொடக்ஷன்ஸ்
கதைசி. கே. வெங்கடராமைய்யா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
என். டி. ராமராவ்
டி. என். துரைராஜ்
ஜமுனா
சித்தூர் வி. நாகையா
பானுமதி ராமகிருஷ்ணா
ஒளிப்பதிவுவி. எஸ். ரங்கா
வெளியீடு1956
ஓட்டம்195 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெனாலி ராமன் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், ஜமுனா, சித்தூர் வி. நாகையா, பானுமதி ராமகிருஷ்ணா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விகடகவி தெனாலி ராமனின் கதையை, அதே பெயரில் எடுத்துள்ளனர். விசயநகர பேரரசின் மன்னரான கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்த தெனாலி ராமனினின் வாழ்க்கையையும் இக்கதை விவரிக்கிறார். விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் பாமினி சுல்தானால் அனுப்பப்படும் வேசி கிருஷ்ணாசிரி கிருஷ்ண தேவராயரை மயக்கி தன் வளைக்குள் வீழ்த்துகிறாள். கிருஷ்ண தேவராயர் நாட்டை சூழ்ந்துள்ள போர் மேகங்களையும், நாட்டு நிர்வாகத்தையும் மறந்து தாசியின் மாயவலையில் இருக்கிறார். இதில் இருந்து ராயரையும் நாட்டையும் காப்பாற்ற ராமன் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு தாசியிடம் இருந்து மன்னரை மீட்கிறான். படை திரட்டிவரும் பீஜாபூர் சுல்தானுக்கு போரில் உதவியாக பாபர் யானைப்படையை அனுப்புவதை அறிந்து சமயோசிதமாக பாபரை சந்தித்து, பீசாபூர் சுல்தானுக்கு ஆதரவளிப்பதை தடுத்து, போரில் விஜயநகர பேரரசு வெற்றிகொள்ளப்படுவதில் இருந்து காக்க ராமன் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியதக இந்தப்படும் உள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]