செங்கல்
செங்கல் (Brick) என்பது களிமண்ணை செவ்வக வடிவில் சூளையில் அல்லது வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செயற்கைக் கல்லாகும். கட்டிடங்களையும் நடைபாதைகளையும் அமைக்க செங்கல் பயன்படுகிறது.[1][2][3]
வரலாறு
[தொகு]கி.மு 7500 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்ட செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதலில் வெயிலில் சுட்டு உருவாக்கப்படும் செங்கல் கற்களை மெசப டோமியாவில் (தற்போதைய ஈராக்) கி.மு 4000 - ம் வாக்கில் உருவம் பெற்றது.
செங்கல்லின் அளவு
[தொகு]செங்கல்லின் நியம அளவு = 65mm x 102.5mm x 215mm செங்கல்லின் தோற்ற அளவு = 75mm x 112.5mm x 225mm (செங்கல்லின் தோற்ற அளவு என்பது சுவர் ஒன்றில் கட்டப்பட்ட பின்னரான அளவாகும்)
மூலப்பொருட்கள்
[தொகு]பொதுவாக, செங்கல் பின்வரும் மூலப்பொருட்களை கொண்டுள்ளது.
1. சிலிக்கா - எடையில் 50% முதல் 60% வரை
2. அலுமினா - எடையில் 20% முதல் 30% வரை
3. சுண்ணாம்பு - எடையில் 2% முதல் 5% வரை
4. இரும்பு ஆக்சைடு - எடையில் 5% முதல் 6% வரை
5. மக்னீசியம் - எடையில் 1% விட குறைவாக
செங்கல் உற்பத்தி செய்ய ஏற்ற களியின் பண்புகள்
[தொகு]1.நுண்ணிய தன்மை
[தொகு]பொருத்தமான களித் துணிக்கைகள் 0.075 mm அளவை விட குறைவாக இருக்க வேண்டும்.
2.மணல் கட்டமைப்பு
[தொகு]களியுடன் இயற்கையாகவே சேர்ந்து இருக்கக்கூடிய மணலை இது குறிக்கும். களியுடன் சேர்ந்து இருக்கக் கூடிய மணல் 20%-30% ஆக காணப்பட வேண்டும்.
3.கழிவுப் பொருட்கள் அற்றிருத்தல்
[தொகு]4.சிறு கற்கள் பரல் போன்றவை அற்றிருத்தல்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Interlocking bricks & Compressed stablized earth bricks - CSEB". Buildup Nepal.
- ↑ "Bricks that interlock".
- ↑ W., Beamish, A. Donovan (1990). Village-level brickmaking. Vieweg. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-528-02051-2. இணையக் கணினி நூலக மைய எண் 472930436.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)