உள்ளடக்கத்துக்குச் செல்

தலிகோட்டா சண்டை

ஆள்கூறுகள்: 16°28′23.9″N 76°18′42.6″E / 16.473306°N 76.311833°E / 16.473306; 76.311833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலிகோட்டா சண்டை
இந்தியா மீதான இசுலாமியப் படையெடுப்பின் ஒரு பகுதி
நாள் சனவரி 1565
இடம் தற்கால கருநாடகத்தின் தலிகோட்டாவுக்கு அருகில் ராக்சசி மற்றும் தெங்கடி கிராமங்களைச் சுற்றி[1]
16°28′23.9″N 76°18′42.6″E / 16.473306°N 76.311833°E / 16.473306; 76.311833
தக்காண சுல்தானகங்களின் கூட்டணி வெற்றி பெற்றது
பிரிவினர்
தக்காண சுல்தானகங்கள் விஜயநகரப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
* முதலாம் உசைன் நிசாம் ஷா
  • முதலாம் அலி அதில் ஷா
  • இப்ராகிம் குலி குதுப் ஷா வாலி
  • முதலாம் அலி பரீத் ஷா
  • புர்கான் இமாத் ஷா
*ராம ராயர் மரணதண்டணை
பலம்
140,000 காலாட்கள், 10,000 குதிரைகள் மற்றும் 100 மேற்பட்ட யானைகள்[2] 80,000 காலாட்கள், 30,000 குதிரைகள் மற்றும் பல பீரங்கிகள்[2]
இழப்புகள்
ராமராயர் உள்ளிட்ட 100,000 பேர் தெளிவில்லை, கடுமையிலிருந்து பெருமளவு
Lua error in Module:Location_map at line 391: The value "{{{longitude}}}" provided for longitude is not valid.

தலிகோட்டா சண்டை அல்லது தலைக்கோட்டை சண்டை அல்லது தலைக்கோட்டை போர் (Battle of Talikota, கன்னடம்: ತಾಳಿಕೋಟೆ, தெலுங்கு: ತಾಳಿకోట, சனவரி 26, 1565), விசயநகரப் பேரரசிற்கும் தக்காண சுல்தான்களுக்கும் இடையே நடந்த இறுதிகட்டப் போராகும். இதன் விளைவாக தென்னிந்தியாவின் கடைசி பெரும் இந்து இராச்சியம் முடிவிற்கு வந்தது. தலிகோட்டா கர்நாடகாவின் பீஜப்பூரின் தென்கிழக்கே ஏறத்தாழ 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. விசயநகரத்தின் தலைமை அச்சுத ராயரிடம் இருந்து ராமராயருக்கு மாறிய போது சுல்தானகங்கள் ஒன்றிணைந்து விசயநகரத்தை வெல்ல நினைத்தனர். மேலும் சுல்தானகங்களுக்குள் நடந்த திருமணங்கள் அவர்களது உட்பூசல்களைத் தீர்த்தது. எனவே அவர்கள் ஒன்றிணைந்து தங்கள் பொது எதிரியான விசயநகரப் பேரரசை வென்றனர்.

உசாத்துணைகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Sastri, K A Nilakanta (ed.), "The battle of Rakshasi Tengadi", Further Sources of Vijayanagara History Vol 1, pp. 263–264
  2. 2.0 2.1 இந்தியா டுடே Collector's edition of History

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலிகோட்டா_சண்டை&oldid=3799876" இலிருந்து மீள்விக்கப்பட்டது