உள்ளடக்கத்துக்குச் செல்

தத்துவராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தத்துவராயர் (Tattuvarayar) என்பவர் கிபி 15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர். வடமொழி வேதாந்த நெறிக்குத் தமிழில் இலக்கணம் கண்ட முதல் ஆசிரியர்.[1] இவர் தன் ஆசிரியர் சொரூபானந்தர் உதவியுடன் 18 நூல்களைத் தமிழில் பாடினார். அவற்றை 'அடங்கன்முறை' (அடங்கல் முறை) என குறிப்பிடுகின்றனர்.

அடங்கல்முறை நூல்களை,

  • கூந்தலை உடையவன் வாரி முடிக்கிறான் (தமிழில் வல்லவன் பாடுகிறான்) என்றும்,
  • உலகியல் வாழ்க்கைக்கு உதவாதவை என்றும்

இவரது ஆசிரியர் சொரூபானந்தர் கருதினார்.

நூல்கள்

[தொகு]

தத்துவராயர் நூல்கள் என இங்கு 26 நூல்கள் காட்டப்பட்டுள்ளன.
இவற்றில்

  • அடங்கல்முறை என்று குறிப்பிடப்படும் தொகுப்பு நூல்கள் எண் 3 முதல் 20 வரை எண்ணிடப்பட்டுள்ள 18 நூல்கள்
    • ஆசிரியருக்கு அடங்கி நடந்த முறைமையைக் கூறுவதால் பெற்ற பெயர்.
  • எண் 22-ல் குறிப்பிடப்பட்டுள்ள நூல் தத்துவராயர் பயன்படுத்திக்கொண்ட நூல்.

பட்டியல்

[தொகு]
எண்நூலின் பெயர்நூலின் மறுபெயர் (உள்ளடக்கப் பெயர்)
1சிவப்பிரகாச வெண்பாகுருவின் குரு சிவப்பிரகாசருக்கு வணக்கம்
2தத்துவாமிர்தம்குருவைத் தேடியது
3திருத்தாலாட்டுதத்துவப் பிரகாசம்
4பிள்ளைத் திருநாமம் (பிள்ளைத்தமிழ்)தத்துவ நிலையம்
5வெண்பா அந்தாதிதத்துவ விளக்கம்
6கலித்துறை அந்தாதிதத்துவ சாரம்
7சின்னப்பூ வெண்பாதத்துவ சரிதை
8தசாங்கம்தத்துவ போதம்
9இரட்டைமணி மாலைதத்துவ தீபம்
10மும்மணிக்கோவைதத்துவ ரூபம்
11நான்மணி மாலைதத்துவ அனுபவம்
12கலிப்பாதத்துவ சித்தி
13ஞானவினோதன் கலம்பகம்தத்துவ ஞானம்
14உலாதத்துவ காமியம்
15சிலேடை உலாதத்துவ வாக்கியம்
16நெஞ்சுவிடு தூதுதத்துவ நிச்சயம்
17கலிமடல்தத்துவத் துணிவு
18அஞ்ஞவதைப் பரணிதத்துவக் காட்சி
19மோகவதைப் பரணிஇதன் மறுபெயர் ஏடுகளில் விடுபட்டுள்ளது
20அமிர்த சாரம்தத்துவ தரிசனம்
21பாடுதுறை(தத்துவராயர், சொரூபானந்தர் பிரிந்து கூடுதல்
22ஈசுர கீதைசிவப்பிரகாசர் சித்தி (வடமொழிநூல் தமிழில் மொழிபெயர்ப்பு)
23பிரம கீதைசொரூபானந்தர் சித்தி
24சசிவன்ன போதம்மோகவதைப் பரணி நூலின் தனிப்பகுதி
25பெருந்திரட்டுசிவப்பிரகாசம், (சிவப்பிரகாசர் திரட்டியது)
26குறுந்திரட்டுசிவப்பிரகாசத்திலிருந்து தத்துவராயர் திரட்டியது

இவர் வேதாந்தி. தம் வேதாந்தக் கொள்கைகளை நிறுவுவதற்காகத் தேவாரப்பாடல்களைத் தன் கோணத்திற்கேற்பத் திரட்டி வெளியிட்டார். அவரது தேவாரத் திரட்டு இரண்டு நூல்களாக உள்ளன.

என்பன அவை.

இவற்றையும் காண்க

[தொகு]

கருவிநூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1959) திருத்தப்பட்ட பதிப்பு 2005

அடிக்குறிப்பு

[தொகு]
  1. பிரமம் என்பது வேதத்தின் மூலப் பொருள். இந்த வேதக் கொள்கைகளைப் பாட வந்த தத்துவராயர் தன்னை அறியாமல் தன் சூழல் தாக்கத்தால் சைவ, வைணவச் செய்திகளை அரவணைத்துக் கொள்கிறார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்துவராயர்&oldid=4447816" இலிருந்து மீள்விக்கப்பட்டது