சாத்தாத வைணவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பூணூல் அணியாத வைணவ அடியார்களை சாற்றாத வைணவர்கள், சாத்தாத வைணவர்கள் அல்லது சாத்தாத முதலிகள் என்பர்.

ஸ்ரீரங்கத்தில் சாற்றாத வைணவர்கள் குடியிருக்கும் வீதிக்கு சாத்தாத வீதி என்ற பெயர் உள்ளது.

வரலாறு[தொகு]

இராமானுசர் தான் வாழ்ந்த காலத்தில், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் அந்தணரல்லாத, தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட பிற சமூக மக்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து, நெற்றியில் திருமண் காப்பிடச் செய்து, பெருமாள் கோயிலில் சென்று வழிபடவும், கோயில் கைங்கரியங்களில் ஈடுபடவும் வழிவகுத்தார். இதனால் ஸ்ரீவைஷ்ணவத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கைக் கூடியது.

பெருமாள் கோயில் பணிகளில்[தொகு]

சாற்றாத வைணவர்கள், பெருமாள் கோயில் தொடர்பாக, நந்தவனம் பராமரித்தல், கோயிலுக்கு பூக்களைப் பறித்து மாலைகள் தொடுத்தல், குளங்கள் மற்றும் ஆறுகளிலிருந்து புனித நீரை கோயிலுக்கு வருதல், பெருமாள் திருவீதி உலா செல்கையில் பல்லக்கு சுமத்தல், கட்டியம் கூறுதல், தீப்பந்தம் பிடித்தல், நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் பாடுதல் மற்றும் பிற திருப்பணிகளை செய்வோரை சாற்றாத வைணவர்கள் என்பர்.

அந்தணர்கள் இல்லாத சிறு கிராமங்களில் உள்ள கிருஷ்ணர், இராமர், ஆஞ்நேயர், திரௌபதி, தருமராசா போன்ற வைணக் கோயில்களில் சாற்றாத வைணவர்கள் பூஜைகள் செய்வர்.

பஞ்ச சம்ஸ்காரம்[தொகு]

சாற்றாத வைணவர்கள் தங்கள் குருமார்களை அணுகி, பஞ்ச சம்ஸ்காரச் சடங்குகள் செய்து கொள்வர். இதனால் பிற ஸ்ரீவைஷ்வணவர்கள் போன்று சாற்றாத வைணவர்கள் தமது உடலில் இரண்டு தோள் பட்டைகளில் சங்கு மற்றும் சக்கரத்தை பொறித்துக் கொள்வதுடன், நெற்றி, மார்பு, தோள்பட்டை மற்றும் இரண்டு கைகளிலும் திருமண் காப்பு இட்டுக் கொள்வர்.

புகழ் பெற்ற சாத்தாத வைணவ அடியார்கள்[தொகு]

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராமானுசர் வகுத்த நெறிகளின் படி, அந்தணர் அல்லாத, பிற சமூகத்தினர் விரும்பினால் பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொண்டு, நெற்றியில் திருமண் காப்பிட்டு, பெருமாள் கோயில் கைங்கரியங்களில் ஈடுபடவும், தமிழ் வேதமான நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாசுரங்கள் பாடுவதற்கும் வகை செய்தார். [1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. – கோயிலொழுகு, பாகம் 7 – பகுதி 1, பக்கம் 10-17

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தாத_வைணவர்கள்&oldid=2291600" இலிருந்து மீள்விக்கப்பட்டது