பட்டனார்
Appearance
பட்டனார் [1] 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியார்.[2] பட்டனாரை ஸ்ரீ பட்டனார் எனச் சிறப்பித்துக் கூறுவது வழக்கம். இவர் வேப்பத்தூரில் [3][4] பிறந்தவர். பகவத் கீதை நூலை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து விருத்தப் பாக்களால் பாடியவர். இவரது தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கு இவர் பரமார்த்த தரிசனம் எனப் பெயர் சூட்டினார். எனினும் பகவத் கீதை என்றே இந்த நூல் ஏடுகளில் காணப்படுகிறது.
பட்டனார் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை. எனினும் பட்டாகரன்,[5] வேதப் பட்டாகரன் [6] என்னும் பெயர்கள் இவருக்கு வழங்கப்பட்டதாகச் சில பாடல்களால் அறியமுடிகிறது.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 227.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டர் வேறு.
- ↑ "சேம மாநகரம் தேடி ஆயனார் பட்டராய் அவதரித்து அருளினாலே போய நாள் மொழிந்த கீதை" - இதன் பாடல் ஒன்று இவ்வாறு குறிப்பிடுகிறது
- ↑ சேம மாநகரம் என்பது பல புலவர்கள் தோன்றியதாகிய வேப்பத்தூர்
- ↑
தேர் பட்ட கன்றுக்கு அன்று சேயைச் சிதைவித்த சென்னிக்கு
நாற்பத்து இரண்டாம் சன்மம் நல்ல மாரபு தன்னில்
மேற்பட்ட வேளாண்குடி முதல் வேதப் பட்டாகரனே என்னும்
பால் பட்ட பத்தியால் அணைந்த பரமார்த்த தரிசனமே - ↑
கட்டு ஆர் மயன் இருள் காதபச் சோதி கலை நிரம்பி
எட்டாதது பார்த்து இன்பமாக் கவின் மதி எவ் வினையும்
விட்டார்கள் விட்டபின் வேதச் சுடரொளி மெய் உணர்த்த
பட்டாகரன் அருளாம் பரமார்த்த தரிசனமே