உள்ளடக்கத்துக்குச் செல்

பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா
பக்திவேதாந்த சுவாமி பயணித்த இடங்கள்

பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா (Abhay Charanaravinda Bhaktivedanta Swami Prabhupada: செப்டம்பர் 1, 1896 - நவம்பர் 14, 1977) (சமசுக்கிருதம்: अभयचरणारविन्द भक्तिवेदान्त स्वामीप्रभुपाद, வங்காள மொழி: অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামীপ্রভুপাদ,) என்பவர் இஸ்கான் எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவியவர் ஆவார். இந்நிறுவனத்திற்கு உலகெங்கிலும் 120 க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள், கல்வி நிறுவனங்கள், ஆலயங்கள் மற்றும் வைதீகப் பண்ணைகள் உள்ளன. 1896 ஆம் ஆண்டு இந்தியாவின் கல்கத்தா நகரில் பிறந்த இவரது ஆசான் பக்தி சித்தாந்த சரஸ்வதி கோசுவாமி ஆவார். பக்தி சித்தாந்த சரஸ்வதி கோசுவாமி பிரபல மத ஞானியும், அறுபத்து நான்கு கௌடிய மடம் என்றறியப்படும் வைதீக நிறுவனங்களை (சென்னை உட்பட) நிறுவியவர். வேத ஞானத்தை பிரச்சாரம் செய்வதற்காய் தமது வாழ்வை அர்பணம் செய்ய பிரபு பாதாவை ஒத்துக் கொள்ளச் செய்தார் குருதேவர். இவ்வாறு பிரபுபாதா, 1933'ல் (பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு) அலகாபாத் நகரில் அவரது தீட்சை பெற்ற சீடரானார். பிரபு பாதா டெக்சாசில் டல்லஸ் நகரில் குருகுலப்பள்ளியை நிறுவி ஆதார, இடைநிலைக் கல்வியில் வைதீக முறையை மேற்கத்திய நாடுகளில் அறிமுகம் செய்தவர். உலகெங்கும் இயங்கிவரும் இப்பள்ளிகளின் கேந்திரம் இந்தியாவில் பிருந்தாவனம் என்னுமிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. பிரபுபாதாவின் இலக்கியத் தொண்டு மிகவும் குறிப்பிடத் தக்கவை. இந்திய இதிகாசங்கள் பலவற்றை இவர் ஆங்கில மொழியில் மொழிபெயர்த்துள்ளர். இவரது நூல்கள் உலக பாடசாலைகள் பலவற்றில் மேற்படிப்புக்கான பாடப் புத்தகங்களாக வைக்கப்பட்டுள்ளன.[1] இவை நாற்பதுக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. 1972 இல் நிறுவப்பட்ட பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் பிரபு பாதாவின் நூல்களை மட்டும் வெளியிடுவதிலேயே இந்திய மத, தத்துவ ஞான நூற்களை வெளியிடும் உலகின் மிகப்பெரிய நூல் வெளியீட்டு நிறுவனமாகப் பெயர் பெற்றுள்ளது. பிரபு பாதா ஆறு கண்டங்களிலும் பதினான்கு முறைகளுக்கு மேல் பயணம் செய்து கிருஷ்ண பக்தி பற்றி உரையாற்றியுள்ளார்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. பகவத் கீதை உண்மை உருவில், பக்தி வேதாந்த புத்தக நிறுவனம்