நஞ்சீயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நஞ்சீயர்
பிறப்புஸ்ரீ மாதவர்
திருநாராயணபுரம்
இறப்புதிருவரங்கம், தமிழ்நாடு

நஞ்சீயர் எனும் வைணவப் பெரியவர் திருநாராயணபுரம் (தற்போதைய மேல்கோட்டை) எனும் ஊரில் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஸ்ரீ மாதவர் எனும் இயற்பெயரோடு பிறந்தார். 12-ஆம் நூற்றாண்டின் சிறந்த வைணவத் தமிழ் உரையாசிரியர்களுள் ஒருவர். வைணவத் தமிழ் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புக் கணிசமானது..[1]

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

மாதவாச்சாரியர் எனும் சிறந்த அத்வைதி ஆகிய இவரைப் பராசர பட்டர் மூலம் விசிஷ்டாத்வைத கொள்கைக்கு மாற்றியருளினார் இராமானுசர். பராசர பட்டருக்குச் சீடராக அவருடனே திருவரங்கம் சென்று இலக்கிய பணிகளை மேற்கொண்டார்.

பிறபெயர்கள்[தொகு]

இலக்கிய படைப்புகள்[தொகு]

  • திருவாய்மொழி ஒன்பதினாயிரப்படி வியாக்கியானம்
  • கண்ணிநுண் சிறுதாம்பு வியாக்கியானம்
  • திருப்பாவை ஈராயிரப்படி
  • திருவந்தாதி வியாக்கியானம்
  • திருப்பல்லாண்டு வியாக்கியானம்
  • ரகஸ்யத்ரயவிவரணம் வியாக்கியானம்
  • நூற்றெட்டு சரணாகதி கத்யத்ரய வியாக்கியானம்

சிறப்பு[தொகு]

தன் வாழ்நாளில் திராவிட வேதமாகிய நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் அங்கமாகிய திருவாய்மொழிக்கு நூறு முறைக்குமேல் காலட்சேபம் செய்தருளினார் என்பது இவரின் சிறப்பு.

மேற்கோள்கள்[தொகு]

  1. நஞ்சீயர்

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நஞ்சீயர்&oldid=3302008" இருந்து மீள்விக்கப்பட்டது