வேளுக்குடி கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேளுக்குடி கிருஷ்ணன் (Velukkudi Krishnan) (பிறப்பு: 1963), உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி என்றும் அழைக்கப்படும் [1] கிருஷ்ணன் இந்து சமயத்தின் ஸ்ரீவைஷ்ண சம்பிரதாயத்தின் அறிஞர் ஆவார்.[2] வேளுக்குடி கிருஷ்ணன் நாலாயிர திவ்விய பிரபந்தம், இராமாயணம், மகாபாரதம், பாகவதம், வைணவ புராணங்கள், பகவத் கீதை, ஸ்ரீபாஷ்யம், உபநிடதங்கள் குறித்து பொது இடங்களிலும், பொதிகை போன்ற தொலைக்காட்சிகளிலும் ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றிவருபவர்.[3][4][5] மக்களிடம் இந்து சமய ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கின்சித்கரம் எனும் அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.[6]

இவரது தந்தை வேளுக்குடி வரதாச்சாரியார் புகழ்பெற்ற வேத விற்பன்னர் ஆவார். வேளுக்குடி கிருஷ்ணன் தொழில் முறையில் பட்டயக் கணக்கர் (Chartered Accountant) ஆவார். தமது 28-ஆம் அகவையின் போது 1991-இல் வரதாச்சாரியார் மறைவிற்குப் பின், வேளுக்குடி கிருஷ்ணன் ஆன்மிகச் சொற்பொழிவுகளை ஆற்றத் துவங்கினார். தமது ஆன்மிக வாழ்க்கைக்கு பட்டயக் கணக்கர் தொழில் இடையூறாக இருந்ததால், 1996-இல் பட்டயக் கணக்கர் தொழிலைக் கைவிட்டார்.[3][7]

ஐக்கிய அமெரிக்க நாடு போன்ற வெளி நாடுகளிலும் வேளுக்குடி கிருஷ்ணன் தமிழ், சமசுகிருதம், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ஆன்மிகச் சொற்பொழிவுகளை ஆற்றிவருகிறார்.[2] தற்போது திருவரங்கத்தில் வாழ்ந்து வருகிறார்.[3]

வேளுக்குடி கிருஷ்ணன் கண்ணன் நாமம் சொல்லும் போன்ற பல ஆன்மீக நூல்களை இயற்றியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "New Releases". Kinchitkaram Trust. Retrieved 2013-04-11.
  2. 2.0 2.1 Prema Nandakumar. "Dedicated to the cause of sanatana dharma". பரணிடப்பட்டது 2004-12-31 at the வந்தவழி இயந்திரம் The Hindu. 2004-12-31. Retrieved 2013-04-11.
  3. 3.0 3.1 3.2 Indira Kannan. "The High-Tech Guru". The Indian Express. 2012-08-05. Retrieved 2013-04-11.
  4. "Programmes". பரணிடப்பட்டது 2015-05-20 at the வந்தவழி இயந்திரம் DD Podhigai. பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Retrieved 2013-04-11.
  5. "Perpetuation of Sanskrit and Dravida Vedas". Kinchitkaram Trust. Retrieved 2013-04-11.
  6. https://www.kinchit.org/ கின்சித்கரம்
  7. V. Balasubramanian. "Scriptures as a way of life". The Hindu. 2010-08-06. Retrieved 2013-04-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேளுக்குடி_கிருஷ்ணன்&oldid=3890976" இலிருந்து மீள்விக்கப்பட்டது