திருப்பாவை மூவாயிரப்படி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பாவை மூவாயிரப்படி [1] என்னும் நூல் ஆண்டாள் திருப்பாவை நூலுக்கு எழுதப்பட்ட விரிவுரை. மணவாள மாமுனிகள் இதனை 13 ஆம் நூற்றாண்டில் எழுதினார். இந்த நூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டாலும் நல்ல தமிழ்நடை ஓட்டத்தையும் இதில் காணமுடிகிறது.

திருப்பாவை 16 ஆம் பாடல் "நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே" என்று தொடங்குகிறது. இதற்கு இந்த நூலில் உள்ள வியாக்கினப் பகுதி.

"கொடி தோன்றும் தோரணவாசல் காப்பானே, மணிக் கதவம் தாள் திறவாய். ஆர்த்த ரக்ஷணத்துக்குக் கொடி கட்டித் தோரணமும் நட்டு வைத்தாற் போலே, பெண்கள் தடுமாற்றம் தீர முகம் தருகைக்கு அன்றோ உன்னை இங்கு வைத்தது, மணிக்கதவம் தாள் திறவாய்"

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 274.