விண்ணகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விண்ணகரம் என்பது ஊர்ப்பெயராகும். தமிழ் நாட்டில் ஈசனது கோவில் ஈச்சரம் என்று பெயர் பெற்றதைப் போல , விஷ்ணுவின் கோவில் விஷ்ணு கிரகம் எனப் பெயர் பெற்றது. அப்பெயர் விண்ணகரம் என்று மருவிற்று என்பர். வைணவர்கள் தலை கொண்டு போற்றும் 108 திருப்பதிகளில் ஆறு விண்ணகரங்கள் உள்ளன.

திருவிண்ணகரம்[தொகு]

கும்பகோணத்திற்கு மூன்று மைல் அளவில் உள்ள திருமால் கோயில் திரு விண்ணகரம் என்று அழைக்கப்பட்டது. நம்மாழ்வார் பாடிய சிறப்பு பெற்றது. அவர் 'தன்னொப்பர் இல்லப்பன்' என இறைவனை அழைத்ததால் ஒப்பிலியப்பன் என இறைவன் பெயர் நிலைத்தது என்பர். நாளடைவில் அது உப்பிலியப்பன் என மருவிற்று என்பர் .அப்பெயருக்கு ஏற்ப அந்த அப்பனுக்கு உப்பில்லாத நிவேதனம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

சீராம விண்ணகரம்[தொகு]

சீர்காழியில் உள்ள சீராம விண்ணகரம் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பதியாகும். இது தாடாளன் கோவில் என வழங்கப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

ரா.பி. சேதுப்பிள்ளை.'ஊரும் பேரும்',பழனியப்பா பிரதர்ஸ். 1956

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்ணகரம்&oldid=1870415" இலிருந்து மீள்விக்கப்பட்டது