உள்ளடக்கத்துக்குச் செல்

திருமலையாழ்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமலையாழ்வார் 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியவர்களில் ஒருவர். திருமலையாழ்வார் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை ஆகும்.[1] இவர் திருவாய்மொழிப் பிள்ளை எனச் சிறப்புப்பெயர் பெற்றவர். வடமொழியில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்த இவர் அந்நூல்கள் காட்டும் கண்ணனை விடத் திருவாய்மொழி நூலில் காட்டப்படும் கண்ணன் மேலானவன் என உணர்ந்தார். இதனால் தன் மாணவர் மணவாள மாமுனிகள் என்பவருக்கு தாம் திருநாடு செல்லும் காலத்தில் (இறக்கும் தருவாயில்) தம் ஏனைய மாணவர்களை மணவாள மாமுனிகளிடம் ஒப்படைத்துவிட்டு இதனைக் கூறினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. கொந்தகைப் பெருமாள் கோயில்

கருவிநூல்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமலையாழ்வார்&oldid=2717814" இலிருந்து மீள்விக்கப்பட்டது