உள்ளடக்கத்துக்குச் செல்

பிள்ளை உறங்கா வல்லி தாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தனுர் தாசர் எனும் இயற்பெயர் கொண்ட மல்யுத்த வீரரும், பெரும் செல்வந்தருமான பிள்ளை உறங்கா வல்லி தாசர், அழகிய கண்களைக் கொண்ட தன் மனைவி பொன்னாச்சியாருடன் உறையூரில் வாழ்ந்து வந்தார். [1]

ஒருமுறை இராமானுசர் தன் சீடர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது, பிள்ளை உறங்கா வில்லி தாசர், தன் மனைவி பொன்னாச்சியை கடும் வெயிலிலிருந்து காக்க, பொன்னாச்சி மீது குடை பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் அவளது கால்கள் புண்ணாகாமல் இருப்பதற்குத் தரையில் ஒரு துணியை விரித்துக் கொண்டும் செல்வதைக் கவனித்தார்.

உறங்கா வில்லி தாசரின் இச்செயலுக்கு இராமானுசர் காரணம் கேட்டதற்கு, அதற்கு தாசர் அவளுடைய கண்களின் அழகில் முழுமையாக அடிமையாகி விட்டதால், அந்தக் கண்களின் அழகை பாதுகாக்கத் தான், அவள் மீது குடை பிடித்ததாகக் கூறினார்.

உன் மனைவி பொன்னாச்சியின் கண்களை விட மிக அழகான கண்களைக் காட்டினால் அதற்கு அடிமையாகி விடுவீர்களா என பிள்ளை உறங்கா வல்லி தாசரிடம், இராமானுசர் கேட்க, தாசரும் தன் மனைவியின் கண்களைவிட வேறு அழகான கண்களைக் காண்பித்தால் அதற்கு அடிமையாகி விடுவதாக ஒப்புக் கொண்டார்.

பிள்ளை உறங்கா வல்லி தாசரை திருவரங்கன் கோயிலுக்கு அழைத்துச் சென்று, திருப்பாணாழ்வாருக்கு காட்டியருளிய படி, அழகிய கண்களை தாசருக்கும் காண்பித்து அருளும் படி, எம்பெருமாளிடம் இராமானுசர் வேண்டினார்.

அவ்வாறே எம்பெருமானும் தம்முடைய அழகிய கண்களைக் காட்டியருள, அக்கண்களின் உண்மையான அழகை உணர்ந்த பிள்ளை உறங்கா வல்லி தாசர். பின் தங்கள் உடைமைகளைத் துறந்து, இராமானுசரிடம் சரணடைந்த தாசரும், அவர் மனைவி பொன்னாச்சியும் ஸ்ரீரங்கம் வந்தனர்.

இராமரின் வனவாசத்தின் போது இலக்குமணன் உறங்காமல் பாதுகாத்தாரோ அவ்வாறே, தாசரும், அவரது மனைவி பொன்னாசியும் இடைவிடாது இராமானுசரைத் துதித்துக் கொண்டு சேவை செய்து கொண்டிருந்ததால், பிரபலமான தனுர் தாசருக்கு, பிள்ளை உறங்கா வில்லி தாசர் என்ற திருப்பெயர் ஆயிற்று.

தன் சீடரான உறங்கா வல்லி தாசருக்கு, திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கருவறை மற்றும் கோயில் நகைகளை காக்கும் பணியை இராமானுசர் ஒப்படைக்கிறார்.

பிள்ளை லோகாசாரியார் தனது ஸ்ரீவசன பூஷணத்தில் எம்பெருமானின் மங்களாசாசனத்தை (எம்பெருமானின் நலனுக்காக வழிபடுதல்) விவரிக்கும்பொழுது, பிள்ளை உறங்கா வில்லி தாசரைக் கொண்டாடியுள்ளார்.

மறைவு

[தொகு]

இராமானுசரின் அணுக்கத் தொண்டர்களும், வைணவ அடியார்களான பிள்ளை உறங்கா வல்லி தாசரும், அவரது மனைவி பொன்னாச்சியும் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிள்ளை உறங்கா வல்லி தாசர்

வெளி இணைப்புகள்

[தொகு]