ஆதி இந்தோ ஐரோப்பிய மக்கள்
ஆதி இந்தோ ஐரோப்பிய மக்கள் (Proto-Indo-Europeans) பனி யுகத்தின் முடிவில் கி மு 4,000இல் அல்லது அதற்கு சிறிது காலத்திற்கு முன்னர் வாழ்ந்த இனக் குழுக்கள் ஆவர். இவர்கள் எழுத்து வடிவம் இல்லாத ஆதி ஆதி இந்தோ ஐரோப்பிய மொழிகளை பேசினர்.
மக்கள்
[தொகு]ஆதி இந்தோ ஐரோப்பிய மக்கள் குறித்தான அறிவு, அவர்கள் பேசிய மொழியாலும், அகழ்வாராய்ச்சிகளாலும் வெளிப்பட்டது. ஆதி இந்தோ ஐரோப்பியர்கள், வெண்கலக் காலத்திய இந்தோ ஐரோப்பிய மக்களுடன் சிறிது தொடர்புடையவர்கள்.
ஆதி இந்தோ ஐரோப்பிய இன மக்கள் செப்புக் காலத்தில், கி மு 5000 முதல் கி மு 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் நடு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் ஸ்டெப்பி புல்வெளிகளில் வாழ்ந்தவர்கள்.
கி மு இரண்டாயிரத்தின் நடுவில் ஆதி இந்தோ ஐரோப்பிய இனக் குழுவினரின் வழித்தோண்றல்கள் கி மு இரண்டாயிரத்தின் நடுவில் அனதோலியா, கிரேக்க ஏஜியன் கடற்கரை பகுதிகள், மேற்கு ஐரோப்பா மற்றும் வட இந்தியா பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.[1]
பண்பாடு
[தொகு]ஆதி இந்தோ ஐரோப்பிய இனக்குழுவின் சில பண்பாடுகள்:
- வீட்டு பயன்பாட்டு விலங்குகளான ஆடு, மாடு, குதிரை, நாய்கள் போன்ற கால்நடைகளை பராமரித்தல் மற்றும் வளர்த்தல்.
- சிறு தானியங்களை பயிரிட்டனர்.[2]
- குளிர்காலத்தில் பனி கொட்டும் பருவ நிலைகளில் வாழ்ந்தனர்.[3]
- கடினமான சக்கரங்களை பயன்படுத்தினர்.[4] used for carts, but not yet chariots with spoked wheels[1]p249
- வானத்தை இறைவனாக வணங்கினர்.
- நாட்டுப்புற பாடல்களை பாடினர்.
- தந்தை வழி உறவு அமைப்பு கொண்டிருந்தனர்.[4]
- பல கடவுள் வழிபாடு கோட்பாடுகள் கொண்டவர்கள். விலங்குகளை வழிபடும் கடவுள்களுக்கு பூசாரிகளின் உதவியுடன் பலி கொடுத்தனர்.
- இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர். இறந்து போன இனக் குழுவின் தலைவர்களின் சடலத்துடன், அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன் புதைத்து, அதன் மீது சிறிய மேடை கட்டினர்.
- பல இந்தோ ஐரோப்பிய இனக்குழுவினர், பூசாரிகள், படைவீரர்கள் மற்றும் இடையர்கள்/உழவர்கள் என மூன்றடுக்கு சமூக அமைப்பு கொண்டிருந்தனர்.
- வெண்கலத்தால் ஆன உழவுக் கருவிகள், போர்க் கருவிகள் கொண்டிருந்த ஆதி இந்தோ ஐரோப்பியர்கள் வெள்ளி மற்றும் தங்கத்தையும் அறிந்திருந்தனர். உணவு, பால் மற்றும் கம்பிளி ஆடைக்காக ஆடு, மாடுகளை வளர்த்தனர். சக்கரங்கள் கொண்ட வண்டியில் காளைகள் பூட்டி ஓட்டினர். தேர்களில் போர்க் குதிரைகளை பூட்டினர்.
இதனையும் காண்க
[தொகு]- இந்தோ ஐரோப்பிய மக்கள்
- இந்தோ ஐரோப்பிய மொழி
- ஆரியர்
- இந்தோ ஆரிய மக்கள்
- இந்தோ ஆரிய மொழி
- இந்தோ-ஈரானிய மொழிகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Mallory J.P. & Adams D.Q. 2006. The Oxford introduction to Proto-Indo-European and the Proto-Indo-European world. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0199296685,
- ↑ Mallory J.P. 1989. In search of the Indo-Europeans: language, archaeology and myth, London: Thames & Hudson.
- ↑ "The Indo-Europeans knew snow in their homeland; the word sneigwh- is nearly ubiquitous." The American Heritage Dictionary of the English Language, Fourth Edition. 2000
- ↑ 4.0 4.1 Calvert Watkins. "Indo-European and the Indo-Europeans. The American Heritage Dictionary of the English Language, Fourth Edition. 2000". பார்க்கப்பட்ட நாள் 2008-04-12.
வெளி இணைப்புகள்
[தொகு]- Indo-European Roots Index, from The American Heritage® Dictionary
- Kurgan culture பரணிடப்பட்டது 2005-08-27 at the வந்தவழி இயந்திரம்
- Indo-European Origins in Southeast Europe
மேலும் படிக்க
[தொகு]- Cavalli-Sforza, Luigi Luca (2000), Genes, peoples, and languages, New York: North Point Press.
- Piazza, Alberto; Cavalli Sforza, Luigi (2006), "Diffusion of genes and languages in human evolution", in Cangelosi, Angelo; Smith, Andrew D.M; Smith, Kenny (eds.), The Evolution of Language: Proceedings of the 6th International Conference (EVOLANG6), Rome: World Scientific (published 12 – 15 April 2006), pp. pages 255--266, archived from the original on 2007-09-10, பார்க்கப்பட்ட நாள் 2007-08-08
{{citation}}
:|pages=
has extra text (help); Check date values in:|publication-date=
(help). - C. Renfrew 1987. Archaeology and language, the puzzle of Indo-European origins. London, Penguin.
- Brian Sykes 2001. The seven daughters of Eve. London. Corgi Books.
- Wells, Spencer (2002), The journey of Man: a genetic odyssey, Princeton University Press.