இந்தோ ஐரோப்பிய மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதி இந்தோ ஐரோப்பிய மக்களின் தாயகமாக கருதப்படும் ஸ்டெப்பி புல்வெளிகள் (கரும் பச்சை நிறத்தில்) மற்றும் தற்காலத்தில் யுரேசியாவில் இந்தோ ஐரோப்பிய மொழிகள் பேசப்படும் பகுதிகள். (இளம் பச்சை நிறத்தில்)

இந்தோ ஐரோப்பிய மக்கள் (Indo-Europeans) இந்தோ ஐரோப்பிய மொழிகள் பேசும் இனக் குழுக்கள் ஆவர். காக்கேசிய இனத்தவர்களான இந்தோ ஐரோப்பிய மக்கள் ஆதி இந்தோ ஐரோப்பிய மொழிகளை பேசியவர்களின் வழித்தோன்றல்கள் ஆவார்.

வெண்கலக் காலத்திய இந்தோ ஐரோப்பிய மொழிகளான ஆதி இந்தோ ஈரானிய மொழி, ஆதி கிரேக்க மொழி, ஆதி செல்டிக் மொழி, ஆதி இத்தாலி மொழி, ஆதி ஜெர்மானிய மொழி, ஆதி ஸ்லோவிக் போன்ற மொழிகளை பேசியவர்கள் ஆவர்.

வரலாற்று காலத்திலும், தற்காலத்திலும் இந்தோ ஐரோப்பிய மொழிகளை பேசுபவர்களை, இந்தோ ஐரோப்பியர்கள் என குறிப்பிடாமல், அவர்கள் பேசும் மொழிக் குடும்பத்தின் பெயரால் அடையாளப்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக அனதோலியர்கள், தொக்காரியர்கள், ஆரியர்கள், ஈரானியர்கள் (இந்தோ ஆரியர்கள்), கிரேக்கர்கள், செல்டிக்குகள், இத்தாலியர்கள், ஜெர்மானியர்கள், பால்டிக்குகள், ஸ்லோவேனியர்கள், ஆர்மீனியர்கள், அல்பேனியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மேலும் அதன் கிளை மொழிகளை பேசுவர்களை அதன் பெயரால் அழைக்கப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக இந்திய-ஈரானிய மொழியின் உட்குடும்ப மொழியான இந்தோ ஆரிய மொழிகளை பேசுபவர்களை, வங்காளிகள், குஜராத்திகள், காஷ்மீரிகள், நேபாளிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோ_ஐரோப்பிய_மக்கள்&oldid=2132615" இலிருந்து மீள்விக்கப்பட்டது