உள்ளடக்கத்துக்குச் செல்

பிரளயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து தொன்மவியலின் அடிப்படையில் பிரளயம் என்பது அழிவாகும். பூலோகம் வெள்ளத்தினால் அழியுமெனவும், பூலோகம் முதலிய பதினான்கு உலகங்களை உடைய அண்டங்கள் அழிக்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது. பல இந்து நூல்கள் பூலோகப் பிரளயம் என்பது சதுர் யுகங்களின் இறுதியான கலியுகம் முடிவுறும் பொழுது ஏற்படும் என தெரிவிக்கின்றன. அப்பொழுது திருமால் கல்கி அவதாரம் எடுத்து உலகில் பாவம் செய்தவர்களை கொல்வதாகவும், அதன் பிறகு பெரு வெள்ளம் ஏற்பட்டு பூலோகம் அழியும் என்றும் கூறப்படுகிறது.

பிரளய வகைகள்

[தொகு]

பிரளயங்களின் வகைகள் குறித்து இந்து சமய நூல்கள் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றன. தேவாரத்தினுள் சிவபெருமானை ஏழு ஊழிகளுக்கும் ஒருவனானவன் என போற்றுகிறார். இதனால் ஏழுவகையான பிரளயங்கள் உள்ளதை அறியலாம்.

“ஊழி ஏழான ஒருவ போற்றி” -தேவாரம் 6:55:8

  1. நித்திய பிரளயம்
  2. நைமித்திக பிரளயம்
  3. அவாந்தர பிரளயம்
  4. மத்திம பிரளயம்
  5. மகா பிரளயம்

என ஐந்து வகையான பிரளயங்கள் பற்றி சிலநூல்கள் குறிப்பிடுகின்றன.

சில புராணங்களில் பிரளயத்தின் வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன. நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம் என மூன்றுவகையான பிரளயங்களையும் மகாபுராணங்களில் ஒன்றான விஷ்ணு புராணம் விவரிக்கிறது.[1] தேயுப்பிரளயம் பற்றி கந்த புராணம் விவரித்துள்ளது.

இவற்றையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள் மேற்கோள்கள்

[தொகு]
  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=10941

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரளயம்&oldid=3913709" இலிருந்து மீள்விக்கப்பட்டது