சுமார்த்தம்
![]() விநாயகரை மையமாகக் கொண்ட "சுமார்த்தத்தின்" ஐந்து முக்கிய தெய்வங்கள்: விநாயகர் (நடு), சிவன் (மேல் இடது), சக்தி (மேல் வலது), விட்டுணு (கீழ் இடது), சூரியன் (கீழ் வலது) | |
நிறுவனர் | |
---|---|
ரிஷி | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
புனித நூல்கள் | |
வேதம் • தர்மசாத்திரங்கள் | |
மொழிகள் | |
சமசுகிருதம், பழமையான தமிழ்மொழி |
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
![]() |
![]() |
சுமார்த்தம் (Smarta; சமக்கிருதம்: स्मार्त, ஸ்மார்த்தம்) என்பது இந்துசமயத்தின் ஒரு பிரிவாகும். இதனைப் பின்பற்றுபவர்கள் சிவன், சக்தி, திருமால், கணேசர், சூரியன் மற்றும் முருகன் என்ற அறுவரையும் விருப்ப தெய்வங்களாக வணங்குகின்றனர்.
தோற்றம்[தொகு]
சுமார்த்தம் பழங்காலம் தொட்டே இருந்து வரும் இறைவழிதான் என்றாலும், ஆதி சங்கரர் தான் சீர்தூக்கி ஒரு புதுமுகத்தைக் கொடுத்தார். தனித்தனியாய் அவரவர்க்கு உகந்த இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டு தனித்தனிப் பிரிவாய் கிடந்தவர்களை அழைத்து, இதோ உங்களுக்கெல்லாம் பொதுவானதொரு சண்மதம் என அதற்கான முறைகளை சீர்படுத்தினார். இதன் படி சிவன், சக்தி, திருமால், கணேசர், சூரியன் மற்றும் முருகன் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்கலாம். பொதுவாக இந்த முறையினை பின்பற்றுவர்களுக்கு ஸ்மார்த்தர் என்று இந்நாளில் வழங்கப்படுவாதால், இந்த வழிமுறையை 'சுமார்த்தம்' என்றே வழங்கலாம். இந்த வழியில் எல்லா வழிகளையும் ஏற்றுக் கொள்ளும், இலகுவான வளைந்து கொடுக்கும் தன்மையை ஏற்படுகிறது. இன்று இந்து மதம் என்று நாமெல்லாம் பொதுவாக சொல்லும் ஒரு பொது முகம் உருவாகுவதற்கு இந்த வழிதான் தான் வித்து.
தத்துவம்[தொகு]
தத்துவப்படி சுமார்த்தர்களுக்கு ஆதி சங்கரரின் அத்வைதம் தான் அடித்தளம். அதாவது இறைவன் ஈசுவரனும், நம் ஜீவனும் உண்மையில் முழுதிலும் பிரம்மமே. மாயையினால் சிக்குண்டதால், ஈஸ்வரன் வேறு ஜீவன் வேறு என்பதாகத் தெரிகிறது. உயர் ஞானம் கிட்டுமாயின், இந்த வேறுபாடு தெளிந்திடும். முக்தி அடைவதற்கு ஒரே பாதை ஞான யோகம்தான் என்பது பெரும்பாலான ஸ்மார்த்தர்களின் நம்பிக்கை. அறிவின் தேடலாலும், குண்டலினி அல்லாத யோக முறையினாலும். குருவின் ஆசியுடன் தொடங்கப்படும் இந்த யோக நெறியில் த்யானிப்பவர், தன்னையே ப்ரம்மமாக நினைவில் நிறுத்தி, மாயையின் தளையில் இருந்து விடுபட முயல்வார். இவர்களின் தீர்கமான, முடிவான இலக்கானது, நானும் அந்த ப்ரம்மமாக இருக்கிறேன் என்று உணர்வதுதான். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் எதெல்லாம் அஞ்ஞானம் (அவித்யயை) என்பதை உணர்ந்து தோற்ற மயக்கத்திலிருந்து விடுபட வேண்டியதுதான். முக்தி அடைதலுக்கு வெறும் மந்திரங்களை ஓதுவதாலாலோ, உயிர் பலி கொடுப்பதாலோ அல்லது தன்னையே வருத்தி நூறு உபவாச நோன்புகள் இருப்பதாலோ அடைந்து விட முடியாது. மறைகளை படித்து உணர்வதும், ப்ரம்மத்தின் பிம்பத்தினை தன்னுள் கண்டுணர்வதும், த்யானத்தினாலும் அஞ்ஞானம் அகன்றிட வழி வகுக்கும்.
இதர வழிகள்[தொகு]
ஞானம் அடைதலுக்கு ஞான யோகமே வழி என்றாலும் அந்த சித்தி கிட்டுவதற்கு மூன்று முன்பாதைகளையும் சொல்கிறார்கள். அவையாவன: பக்தி யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம்.
சுமார்த்தர்களின் அன்றாட செயல்பாடுகள்[தொகு]
- குளியல்
- சந்தியாவந்தனம்
- ஜபம்
- பூஜை
- உபாசனை
- அக்னிஹோத்ரம் அல்லது அக்னிகிரையம்
இவை தவிர அமாவாசைத் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வதும் இவர்கள் வழக்கம்.
வழி செல்லும் மறைகள்[தொகு]
வேதங்கள், அவற்றின் உபநிஷதங்கள், ஸ்மிருதி , புராணங்கள் மற்றும் இதிகாசங்கள்
மேற்கோள்கள்[தொகு]
- ஸத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி, Merging with Siva, Hinduism's Contemprory MetaPhysics, Himalayan Academy, 1999
வெளி இணைப்புகள்[தொகு]
- ஆதி சங்கரர் - அத்வைதம்
- அத்வைத வேதாந்தம் பரணிடப்பட்டது 2005-07-29 at the வந்தவழி இயந்திரம்
- சிருங்கேரி சாரதா பீடம்
- சங்கர சம்பிரதாயம்
- இந்து மதத்தின் நான்கு பிரிவுகள். பரணிடப்பட்டது 2009-01-08 at the வந்தவழி இயந்திரம்
- ஸ்மார்தர்களின் ஷண்மதம்
- ஸ்மார்த்தம். பரணிடப்பட்டது 2011-02-05 at the வந்தவழி இயந்திரம்