திராவிட நாட்டுப்புற சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெய்யம் விழா
ஒரு நாட்டுப்புற தெய்வத்திற்கு நடத்தப்படும் நாட்டுப்புற சடங்கு (மலராய தெய்வா)
கருநாடகத்தில் ஒரு வீட்டமைப்பு சன்னதி

துவக்ககால திராவிட சமயமானது ஆன்ம வாதத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. பண்டைய திராவிட சமயத்தில் காவல் தெய்வ வழிபாடு, இயற்கை வழிபாடு, நீத்தார் வழிபாடு, மறுமை ஆகியன முதன்மை அம்சங்களாக இருந்தன.[1]

வழிபாட்டில் இருந்த கடவுள் ஆவி போன்றவை இயற்கை அல்லது மாந்தரினத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கவில்லை. ஆனால் நேர்மறை மற்றும் எதிர்மறை, நல்ல மற்றும் தீய பண்புகளைக் கொண்டவையாக இருந்தன.[2][3][4] பண்டைய திராவிட சமயத்தின் ஒரு பகுதியாக ஷாமனிசம் மற்றும் ஆவி ஏறுதல் ஆகியன இருந்தன என்பதற்கும் சான்றுகள் உள்ளன.[5] தெய்யம் அல்லது பூத கேலா போன்ற பல வகையான ஷாமனிச நடனங்கள் பண்டைய திராவிட நாட்டுப்புற சமயத்தின் வேரை கண்டுபிடிக்க பயன்படும் சடங்குகளில் ஒன்றாகும்.[6]

இந்த நம்பிக்கைகள் இந்து சமயத்திலும் ஓரளவு செல்வாக்கு செலுத்துகின்றன. மேலும் இவை ஆகம உருவாக்கத்திலும் செல்வாக்கு செலுத்தியுள்ளன.[7] துவக்ககால வேத சமயத்தில் திராவிட மொழியியல் செல்வாக்கானது தெளிவாகத் தெரிகிறது, இந்த அம்சங்கள் பல பழைய இந்திய-ஆரிய மொழிகளில் உள்ளன.ரிக்வேதத்தத்தில் (கி.மு. 1500) திராவிட மொழியில் இருந்து கடன்பெற்ற ஒரு டசன் சொற்கள் அடங்கியுள்ளன. வேதபடைப்புகளான சம்ஹிதைகளில் இருந்து பிற்கால செவ்வியல் இலக்கியக் காலத்துக்கு செல்லச் செல்ல திராவிட தாக்கத்திற்கான மொழியியல் சான்றுகள் பெருகி வளர்கின்றன. [8] இவை துவக்கக்காலத்தில் ஏற்பட்ட சமய, கலாச்சார இணைவைக் காட்டுவதாக [9] [10] அல்லது பண்டைய திராவிடர்களுக்கும் இந்தோ-ஆரியர்களுக்கும் இடையிலான கலாச்சார பரிமாற்றம் இந்திய நாகரிகத்தில் செலுத்திய செல்வாக்கை குறிக்கிறது. [11] [9] [12] [13]

வரலாறு[தொகு]

தமிழ் இலக்கியத்தின் தந்தையாக கருதப்படும் அகத்தியர்.

பண்டைய தமிழ் இலக்கியப் படைப்புகளான தொல்கப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்றவை துவக்ககால பண்டைய திராவிட சமயத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நீல மயில் மீது அமர்ந்தவனும் செந்நிறத்தவனும், என்றும் இளமையும், அழகுமுடையவனான, தமிழர்களின் விருப்பமான கடவுளாக சேயோன் என்று புகழப்பட்டார் . [14] சிவனும் மிக உயர்ந்த கடவுளாகக் கருதப்பட்டார்.[14] சேயோன் [15] மற்றும் சிவன் [16][17][18] ஆகியோரின் ஆரம்பகால வடிவங்கள் உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றுடன் இணைந்தவையாக சிந்து சமவெளி நாகரிக காலம்வரை செல்கிறது.[19][20] சங்ககால நிலம், பருவ காலம் ஆகியவை ஐந்து தினைகளாக அதாவது வகைகளாக பிரிக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்தினைகளில் ஒவ்வொரு தினைகளுக்குமான கடவுள்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது, அவை மலையும் மலைச்சார்ந்த பகுதியுமான குறிஞ்சிக்கு முருகன், காடும் காட்டைச் சார்ந்த பகுதியான முல்லைப் பகுதிக்கு திருமால், வறண்ட நிலப்பகுதியான பாலைக்கு கொற்றவை, வயலும் வயல்சார்ந்த பகுதியான மருதத்துக்கு வஞ்சிக்கோ, கடலும் கடல்சார்ந்த பகுதியுமான நெய்தலுக்கு வருணன் ஆகிய தெய்வங்களாகும். மாயோன், வள்ளி போன்ற பிற தெய்வங்கள் காலப்போக்கில் இந்து சமயக் களவுள்களாக்கப்பட்டனர்.

நம்பிக்கைகள்[தொகு]

திராவிட கட்டிடக்கலையின் பொதுவான வடிவமைப்பு, கோயில் என்ற சொல் மன்னர்களின் வசிப்பிடம் என்பதில் இருந்து உருவானது.

திராவிட நாட்டுப்புற சமயமானது பூர்வீக தெற்காசிய ஆன்ம வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. இது இந்தோ-ஆரிய குடியேற்றத்திற்குப் பிறகு வட இந்தியாவில் உருவான மறுபிறப்பு-கருத்துக்கு முரணானதாகவும், அமேசமயம் மறுமை நம்பிக்கையில் ஒத்ததாகவும் இருந்தது.[21][22]

அரசரானவர் தெய்வீகமானவராக கருதப்பட்டு, சமய முக்கியத்துவம் கொண்டவராக தமிழகத்தில் கொண்டாடப்பட்டார்.[23] அரசர் 'கடவுளின் புவிப் பிரதிநிதி' என்று கருதப்பட்டார். அவர் வாழுமிடம் கோயில் எனப்பட்டது அதன் பொருள் "அரசனின் இல்லம்" என்பதாகும். தற்காலத் தமிழில் கோயில் என்பது இறைவழிபாட்டு இடத்தை அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதை ஒப்பு நோக்கும்போது இறைவனுக்கு அளிக்கும் மரியாதையைப் போன்றே மன்னரும் தமிழ் மக்களால் வழிபாட்டுக்கு உரியவராக இருந்ததை அறியலாம்.[23][23] மன்னரைக் குறிக்கும் தற்காலத் தமிழ்ச் சொற்களான கோ, (கோ = மன்னர்) இறை, (இறை = பேரரசர்) ஆண்டவன் (ஆண்டவன் = ஆட்சிசெய்தவன்) போன்றவை தற்காலத்தில் கடவுளைக் குறிக்கும் சொற்களாக மாறிவிட்டன. திராவிச சமயத்தின் கூறுகள் பிற்காலத்தில் இந்து சமயத்தால் உள்வாங்கப்பட்டன, அதன் வெளிப்பாடாக, சிவனுக்கும் அரசி மீனாட்சியுடன் திருமணம், அவர்கள் மதுரை அல்லது வஞ்சிக்கோவில் இருந்து ஆண்டது போன்ற தொன்மங்களும், பிற்காலத்தில் தமிழ் வழிபாட்டுடன் இணைக்கப்பட்ட இந்திரன் போன்றவை இதைக்காட்டுகின்றன.[23] தொல்காப்பியர் மூவேந்தரை வான்புகழ் மூவர் என்று குறிப்பிடுகிறார்.[23] திராவிட மொழி பேசும் தென்னிந்தியாவில், தெய்வீக அரசதிகாரம் என்ற கருத்து மாநிலத்திலும், கோவில்களிலும் முக்கிய பாத்திரத்தை வகிக்க வழிவகுத்தது.[23]

தாய் தெய்வ வழிபாடானது பெண்மையை பெரிதும் மதித்த ஒரு சமூகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அனைவருக்கும் பிறப்பளித்த இந்த தாய் தெய்வம் ஒரு கன்னியாக கருதப்பட்டார். பொதுவாக இது சாக்தத்துடன் நெருங்கியதாக இருந்தது.[23] சங்ககாலத்தில் இருந்த கோயில்களில் குறிப்பாக மதுரையில், பூசிக்கப்பட்ட தாய்த் தெய்வம் இருந்ததாகத் தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில், பழமுதிர்சோலை சன்னதியில் குறவப் பூசாரியால் நிகழ்த்தப்பட்ட சடங்கின் விரிவான விளக்கம் உள்ளது.[23] ஆரம்பகால திராவிடர்களிடையே நடுகல் எழுப்பி வழிபடும் வழக்கம் நடைமுறையில் இருந்தது, அது சங்க காலத்துக்குப் பிறகும் நீண்டகாலமாக சுமார் 16 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து இருந்துள்ளது. போரில் வெற்றியை நாடிய மக்கள் இந்த நடு கற்களை வணங்குவதால் போரில் வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை இருந்துள்ளது.[23] பக்தி இயக்கம் மற்றும் லிங்காயத்து போன்ற பல இந்து பிரிவுகள் முறையே தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் தோன்றின. இலக்கிய ஆதரங்களைத் தவிர, இப்பகுதியில் நிலவும் நாட்டுப்புற விழாக்கள், கிராம தெய்வங்கள், ஷாமனிசம், சடங்குகள், மரபுகள் ஆகியவை தனித்துவமானவை. இவை துவக்கக்கால திராவிட மக்களின் நம்பிகை /மரபு ஆகிவற்றை ஆராயவுதவும் அம்சங்களாகும்.

தமிழகத்தின் நாட்டுப்புற காவல் தெய்வமான அய்யனார்.

தமிழர்களின் மிகவும் புகழ்வாய்ந்த போர்த் தெய்வமான முருகன், தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.[24][25] தமிழ் பாரம்பரியத்தில், முருகன் சிவனின் இளைய மகனாகவும், பிள்ளையார் மூத்த மகனாகவும் கருதப்படுகிறார். இது வட இந்திய பாரம்பரியத்தில் வேறுபட்டு முருகன் சிவனின் மூத்த மகனாக கருதப்படுகிறார். பெண் கடவுளான பார்வதி தெவியானவர் பெரும்பாலும் தமிழ் இந்து பாரம்பரியத்தில் பச்சை நிறம் கொண்டதாக சித்தரிக்கப்படுகிறார். இது இயற்கையுடனான தொடர்பைக் குறிக்கிறது. பண்டைய தாய் தெய்வத்திலிருந்து வந்ததாக கருதப்படும் மரியம்மன் என்று அழைக்கப்படும் அம்மானின் வழிபாடும் இங்கு மிகவும் பொதுவானதாக உள்ளது.[26] சிலப்பதிகாரத்தின் கதாநாயகியான கண்ணகி, பல தமிழர்களால், குறிப்பாக இலங்கையில் பத்தினித் தெய்வமாக வணங்கப்படுகிறார்.[27] தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், அய்யவழியைப் பின்பற்றுபவர்கள் பலர் உள்ளனர்.[28] மேலும், விஷ்ணு, சிவன், பிள்ளையார், மற்றும் பிற இந்து தெய்வங்களுக்கு பல கோயில்களும் பக்தர்களும் உள்ளனர்.

கிராமப்புற தமிழ்நாட்டில், அய்யானர்கள் என்று அழைக்கப்படும் பல உள்ளூர் தெய்வங்கள், கிராமத்தை தீங்கில் இருந்து பாதுகாக்கும் உள்ளூர் வீரர்களின் ஆவிகள் என்று நம்பப்படுகிறது.[29] அவர்களின் வழிபாடானது பெரும்பாலும் போரில் இறந்த வீரர்களின் நினைவாக வைக்கப்பட்ட நடுகல்லை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த வழிபாட்டு முறை செவ்வியல் இலக்கியங்களில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் இது பண்டைய தமிழ் பாரம்பரியத்தின் எச்சமாக உள்ளது.[30] துவக்ககால திராவிட சமயமானது வேதத்தை ஏற்காத இந்து சமய வடிவத்தை உருவாக்கியது. அவை வரலாற்று ரீதியாகவே தொடர்ந்து அல்லது தற்போது ஆகமங்களாக உள்ளன. இந்த ஆகமகங்கள் வேத சார்பற்றறு உருவானவை.[31] மேலும் இவை ஒன்று வேதத்திற்கு பிந்தைய கால நூல்களாகவோ [32] அல்லது வேத்த்துக்கு முந்தைய இசைப்பாடல்களாகவோ இருக்கவேண்டும்.[33] இந்த தெய்வங்களில் பெரும் பகுதி தெய்வங்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கையின் நாட்டார் தெய்வங்களாக தொடர்ந்து வணங்கப்படுகிறார்கள். மேலும் தென்கிழக்கு ஆசியாவிலும் தொடரும் இத்தெய்வங்களின் செல்வாக்குக்கு எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் உள்ள மரியம்மன் கோயில்கள் உள்ளன. கொங்கன் கடற்கரை, மகாராஷ்டிரா, உள்ளிட்ட வட இந்தியாவின் சில பகுதிகளில் பாம்புகளை ஒத்த காவல் தெய்வ வழிபாடு இன்னும் வழக்கில் உள்ளது. இது இந்து சமயத்தில் பண்டைய திராவிட சமயம் பல்லாயிரம் ஆண்டுகள் உருவாக்கிய தாக்கத்தினால் ஏற்பட்டது ஆகும்.

நடுகல்லானது, தமிழர்களால் "நடுகல்" என்றும், கன்னடர்களால் "வீரக்கல்" என்றும் அழைக்கப்படுகிறது. இது போரில் வீரசெயல்புரிந்து மரணமுற்ற வீரனை நினைவுகூரும் நினைவுச்சின்னமாகும். கிமு 3 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்ட நடுகற்கள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை தென்னிந்தியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நடுகற்களானது பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டவையாக, அதில் வீரனின் போர்ச்செயலை சித்தரிப்பவையாக இருக்கும்.[34] வழக்கமாக இவை கல்லால் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தின் வடிவில் உள்ளன. மேலும் போர் குறித்த விவரிப்புடன் கீழே ஒரு கல்வெட்டுக் குறிப்பும் இருக்கும். வரலாற்றாசிரியர் உபிந்தர் சிங்கின் கருத்துப்படி, இதுபோன்ற நினைவு கற்களானது மிகுதியாக இந்திய மாநிலமான கர்நாடகத்தில் காணப்படுகிறது . 5 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சுமார் இரண்டாயிரத்து அறுநூற்று ஐம்பது நடு கற்கள் கர்நாடகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[35] நினைவுக் கற்களை எழுப்பும் வழக்கமானது இரும்பு காலம் (கி.மு. 1000-கி.மு. 600) வரை காணப்படுகிறது, இருப்பினும் கி.பி 5 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைக் காலத்தில் பெரும்பான்மையாக அமைக்கப்பட்டுள்ளன.

வெறியாட்டம்[தொகு]

"வெறியாட்டம்" என்பது வழிபாட்டின்போது பெண்களுக்கு ஏற்படும் மருளைக் குறிக்கிறது. வெறியாட்டத்தின்போது கடவுளின் செல்வாக்குக்கு ஆட்பட்டு, பெண்கள் பாடி, ஆடுவர் அப்போது ஓரளவு கடந்தக் காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைக் குறித்து முன்னறிவிப்பர், நோய்களையும் கணிப்பர். .[36] சங்க காலத்தைச் சேர்ந்த இருபத்தி இரண்டு கவிஞர்கள் 40 கவிதைகளில் வெறியாடலை சித்தரித்துள்ளனர். வெறியாடும் வேலன் அட்டமாசித்திகளுடைய தீர்கதரிசியாக கருதப்பட்டுள்ளார். வெறியாடல் ஆண், பெண் என இருபாலராலும் நடத்தப்பட்டது..[37]

நடுகல்[தொகு]

துவக்கக்காலத் தமிழர்கள் மத்தியில் நடுகல் எழுப்பி வழிபடும் வழக்கம் நடைமுறையில் இருந்தது, அது சங்க காலத்துக்குப் பிறகும் நீண்டகாலமாக சுமார் 11 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து இருந்துள்ளது.[38] இந்த நடு கற்களை வணங்கி போரில் வெற்றி பெற ஆசிபெற்றால் அது வெற்றிக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை இருந்துள்ளது.[39]

தெய்யம்[தொகு]

தெய்யம் என்ற தெய்வீக நடனம் கேரளத்திலும் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகத்தின் சில பகுதிகளில் பிரபலமாக உள்ள ஒரு சடங்கு ஷமனிய நடனமாகும். தெய்யம் ஆடுபவரின் உடலில் வணங்கப்படும் தெய்வமோ அல்லது அவ்வட்டார வீரனோ பிரவேசிப்பதற்காக நம்புகிறார்கள். ஆடுபவர் பக்தர்கள் மீது அரிசி எறிகிறார், ஆசீர்வதிப்பதன் அடையாளங்களாக மஞ்சள் தூளைப் பிரசாதமாகத் தருகிறார். தெய்யமானது நடனம், அபிநயம், இசை ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் இது பழங்காலப் பழங்குடியினரின் பழக்கவழக்கங்களை உள்ளடக்கியதாக, வீரர் வழிபாடு மற்றும் மூதாதையர்களின் ஆண்மா ஆகியவற்றிற்கு பெருமளவு முக்கியத்துவத்தை அளிக்கிறது. இது ஒரு சமூக-சமய விழாவாக உள்ளது. 400 க்கும் மேற்பட்ட தெய்யங்கள் உள்ளன, ரக்த சாமுண்டி, கரி சாமுண்டி, முச்சிலோட்டு பகவதி, வயனாடு குலேவன், குலிகன், போத்தன் ஆகியவை மிகவும் அற்புதமான தொய்ய நடனங்களாகும். இவை கோவில்களின் முன்பு மேடை, திரைச்சீலை போன்றவை இல்லாமல் ஆடப்படுகின்றன. இதில் ஆதி காலத் தமிழ்ச் சமயத்தின் பண்புகள் உள்ளன.

பெரும்பாலான கிராமங்களின் அமைப்பு தரமானதாக உள்ளதாக கருதலாம். அம்மன் (தாய் தெய்வம்) கோயில் கிராமங்களின் மையத்தில் அமைந்து இருக்கும். மேலும் காவல் தெய்வத்திற்கு கிராமத்தின் எல்லையின் சன்னிதி இருக்கும். தற்காலத்தில், அம்மன் தனியாக வணங்கப்படும் தெய்வமாகவோ அல்லது வேத வழிபாட்டுத் தெய்வமாகவோ மாறிப்போயுள்ளது.[40]

நாட்டுப்புற நடன சடங்குகள்[தொகு]

 • யக்ஷ்கானா என்றால் யக்ஷனின், ( இயற்கை ஆவிகள் ) பாடல் என்பதாகும்.[41] யக்ஷாகனா என்ற பெயரானது (கடந்த 200 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது) முன்னர் கீளிக்கி ஆட்டா, பயலாட்டா, தசவாட்டா என்ற பெயர்களில் அறியப்பட்டது.
 • கூத்து என்பதற்கு நடனம் அல்லது நடிப்பு என்று தமிழில் பொருளாகும். இது பழந்தமிழகத்தில் தோன்றிய ஒரு நாட்டுப்புற கலை வடிவமாகும் .[42][43]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "Hindu pluralism : religion and the public sphere in early modern South India". Library of Congress, Washington, D.C. 20540 USA. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
 2. "Dept of Folklore and Tribal Studies - Dravidian University".
 3. "Tracing the roots of the Tamil God". https://www.thehindu.com/features/metroplus/society/tracing-the-roots-of-the-tamil-god/article6808508.ece. 
 4. Journal of Tamil studies, Issues 31–32. International Association of Tamil Research. 1987.
 5. Iyengar, Srinivasa (1929). History of the Tamils: from the earliest times to 600 A.D. Asian Educational Services. p. 77.
 6. Hastings, James (2003). Encyclopedia of Religion and Ethics, Part 14. Kessinger Publishing.
 7. The Modern review: Volume 28; Volume 28. Prabasi Press Private, Ltd.. 1920. 
 8. Krishnamurti (2003).
 9. 9.0 9.1 Lockard 2007.
 10. Hiltebeitel 2007.
 11. Tiwari 2002.
 12. Zimmer 1951.
 13. Larson 1995.
 14. 14.0 14.1 Kanchan Sinha, Kartikeya in Indian art and literature, Delhi: Sundeep Prakashan (1979).
 15. Mahadevan, Iravatham (2006). A Note on the Muruku Sign of the Indus Script in light of the Mayiladuthurai Stone Axe Discovery. harappa.com இம் மூலத்தில் இருந்து 2006-09-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060904034700/http://www.harappa.com/arrow/stone_celt_indus_signs.html. 
 16. Ranbir Vohra (2000). The Making of India: A Historical Survey. M.E. Sharpe. https://archive.org/details/makingofindiahis00vohr. 
 17. Grigorii Maksimovich Bongard-Levin (1985). Ancient Indian Civilization. Arnold-Heinemann. 
 18. Steven Rosen, Graham M. Schweig (2006). Essential Hinduism. Greenwood Publishing Group. 
 19. Basham 1967
 20. Frederick J. Simoons (1998). Plants of life, plants of death. 
 21. Grimes, John A. (1996). A Concise Dictionary of Indian Philosophy: Sanskrit Terms Defined in English. State University of New York Press. ISBN 9780791430682. LCCN 96012383-{{{3}}}.
 22. Jamison, Stephanie; Witzel, Michael (1992). "Vedic Hinduism" (PDF). Harvard University. pp. 2–4. Retrieved 2019-01-23.
 23. 23.0 23.1 23.2 23.3 23.4 23.5 23.6 23.7 23.8 . 
 24. M. Shanmugam Pillai, "Murukan in Cankam Literature: Veriyattu Tribal Worship", First International Conference Seminar on Skanda-Murukan in Chennai, 28–30 December 1998. This article first appeared in the September 1999 issue of The Journal of the Institute of Asian Studies, பார்க்கப்பட்ட நாள் 6 December 2006
 25. Harold G. Coward,John R. Hinnells,Raymond Brady Williams, The South Asian Religious Diaspora in Britain, Canada, and the United States
 26. "Principles and Practice of Hindu Religion", Hindu Heritage Study Program, archived from the original on 14 November 2006, பார்க்கப்பட்ட நாள் 5 December 2006
 27. PK Balachandran, "Tracing the Sri Lanka-Kerala link", Hindustan Times, 23 March 2006, archived from the original on 10 December 2006, பார்க்கப்பட்ட நாள் 5 December 2006
 28. Dr. R.Ponnus, Sri Vaikunda Swamigal and the Struggle for Social Equality in South India, (Madurai Kamaraj University) Ram Publishers, Page 98
 29. Mark Jarzombek, "Horse Shrines in Tamil India: Reflections on Modernity" (PDF), Future Anterior, pp. 18–36, doi:10.1353/fta.0.0031
 30. "'Hero stone' unearthed", The Hindu, 22 July 2006, Chennai, India, 22 July 2006, archived from the original on 1 அக்டோபர் 2007, பார்க்கப்பட்ட நாள் 5 December 2006
 31. Mudumby Narasimhachary (Ed) (1976). Āgamaprāmāṇya of Yāmunācārya, Issue 160 of Gaekwad's Oriental Series. Oriental Institute, Maharaja Sayajirao University of Baroda.
 32. Tripath, S.M. (2001). Psycho-Religious Studies Of Man, Mind And Nature. Global Vision Publishing House. ISBN 9788187746041. [1]
 33. Nagalingam, Pathmarajah (2009). The Religion of the Agamas. Siddhanta Publications. [2]
 34. "Hero-stone Memorials of India". Kamat Potpourri. பார்க்கப்பட்ட நாள் 2007-03-15.
 35. Chapter “Memorializing death in stone”, Singh (2009), p48
 36. Iyengar, Srinivasa (1929). History of the Tamils: from the earliest times to 600 A.D.. Asian Educational Services. பக். 77. 
 37. Venkatasubramanian, T.K. (2010). Music as History in TamilNadu. Primus Books. பக். 16. 
 38. Shashi, S. S. (1996). Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh: Volume 100. Anmol Publications. 
 39. Subramanium, N. (1980). Śaṅgam polity: the administration and social life of the Śaṅgam Tamils. Ennes Publications. 
 40. Hastings, James (2003). Encyclopedia of Religion and Ethics, Part 14. Kessinger Publishing. 
 41. "yaksha". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2007-09-06.
 42. Dance forms of Tamilnadu பரணிடப்பட்டது 2015-08-14 at the வந்தவழி இயந்திரம்
 43. Tamilnadu.com பரணிடப்பட்டது ஏப்பிரல் 11, 2013 at Archive.today