உள்ளடக்கத்துக்குச் செல்

கூத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை சங்கமம் நிகழ்வில் கூத்து

இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த தமிழை முத்தமிழ் என்கிறோம். நாடகம் என நாம் கூறுவதைப் பழந்தமிழ் கூத்து (ஒலிப்பு) என்று வழங்குகிறது. கூத்து ஆடுவோர் கூத்தர் எனப்பட்டனர். கூத்து அகக்கூத்து, புறக்கூத்து, என இரு வகைப்படும். அகக்கூத்து எனபது வீட்டுக்குள் ஆடப்படும் வரிக்கூத்து. புறக்கூத்து பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறுவது.

பழங்காலம்

[தொகு]

சங்ககாலத்தில் மூன்று வகையான கூத்துகள் நிகழ்ந்துள்ளளன. குரவை, தழூஉ, பிணை என்பன அவை. தெய்வ ஆடல்கள் பதினொன்றும் கூத்தின் வகைகளே. கூத்தினை உணர்த்தும் சொற்கள் பல.[1]

பொழுதுபோக்கு

[தொகு]

கூத்து தமிழர்களின் பாரம்பரிய நாட்டர் கலை வடிவங்களில் ஒன்று. கிராமத்தின் மண்வாசனையையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும், அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை. கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்குச் சொல்கின்றன. முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் பொழுதுபோக்கிற்காகவும், தங்களது களைப்பைப் போக்கும் செயற்பாடாகவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அதுவே நாளடைவில் பல்வேறு பரிணாமங்களைப் பெற்று கலைகளாகத் தோற்றம் பெற்றது. அவர்கள் அன்று பொது முற்றத்தில் ஆடியவை இன்று கூத்து என்ற பெயரைப் பெற்று வளர்ந்து நிற்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இந்தக் கூத்துக்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்தக் கூத்துக்களின் கதையம்சமும், கூத்துக்களினூடாக கூறப்படும் செய்திகளும் தற்போதைய சமூகத்தினரையும் ஈர்ப்பவையாக அமைந்துள்ளன.

புத்துயிர்

[தொகு]

"ஈழத்துக் கூத்தின் வரலாற்றை எடுத்து நோக்கும்போது, கூத்தின் புத்தாக்கத்தில் இரண்டு சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒன்று மீள் கண்டுபிடிப்பு, இன்னொன்று மீளுருவாக்கம். 60 களில் இம்மீள் கண்டுபிடிப்பு நடைபெற்றதாகவும், பின்னர் இது மீளுருவாக்கம் பெற்றதாகவும் கூறப்படுகின்றது." [2] "மீளுருவாக்கம் என்ற சொற்றொடரை இன்று கையாள்வார் அதன் ஒற்றை அர்த்தத்தில் கையாளுகின்றனர். கூத்தை அப்படியே பேண வேண்டும் என்பர் சிலர். கூத்தை சமூகப் பின்னணியில் இருந்து பிரிக்காமல் உருவாக்க வேண்டுமென்பர் சிலர். அதன் அழகியலை மீள் கண்டுபிடிப்புச் செய்து புத்துருவாக்கவேண்டும் என்பர் சிலர்." [2]

பட்டியல்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. நடம், நட்டம், நடனம், வாணி, நாடகம், நிருத்தம், தூக்கு, படிதம், நாட்டியம், கண்ணுள், தாண்டவம், நடை, நட்டணம் (சூடாமணி நிகண்டு, 9-வது செயல் பற்றிய பெயர்த்தொகுதி, 48
  2. 2.0 2.1 க. மோகனதாசன். (2006, டிசம்பர் 03). கூத்தின் மீளுருவாக்கம். வீரகேசரி வார வெளியீடு.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்து&oldid=3693061" இலிருந்து மீள்விக்கப்பட்டது