உள்ளடக்கத்துக்குச் செல்

குரவை, துணங்கை, தழூஉ - ஆட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குரவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

குரவை, துணங்கை, தழூஉ – ஆட்டங்கள் பழங்கால மகிழ்ச்சி விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்கவை.

இவை வேலை செய்த களைப்பு போக இரவில் ஆடப்படும். ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஆடுவர். ஆடும் பாங்கை நோக்கும்போது இவை தனித்தனி ஆட்டங்கள் என்றாலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடப்பவை.

  • குரவை என்பது கைகோத்து ஆடப்படும்.
  • துணங்கை என்பது முடக்கிய கைகளால் விலாவில் புடைத்து ஆடப்படும். [1] துணங்கை ஆட்டம் தோளை உயர்த்தியும் ஓச்சியும் ஆடப்படும். [2]
  • தழூஉ என்பது அடுத்தவர் தோளையோ இடுப்பையோ தழுவிக்கொண்டு ஆடப்படும்.
  • மற்றும் வெறி, கொம்மை(கும்மி), குடந்தம், குஞ்சிதம், ஆவலங்கொட்டல் போன்றனவும் இந்த விளையாட்டுகளோடு நிகழும். [3]

பழங்கால நிகழ்வுகள்

[தொகு]
  • இளையவர் தெரு மணலில் தழூஉ ஆடினர். குழ்தைகளைத் தூக்கிச் சென்று அங்கு வேடிக்கை காட்டினர். [4]
  • மன்றில் தழூஉ ஆடும்போது குரவையும் நிகழும். [5]
  • தழூஉ ஆட்டத்தில் குரவையும் சேர்த்து ஆடப்படும். [6]
  • குறிஞ்சி நிலத்தில் முருகனை வழிபடுகையில் மன்றத்தில் தழூஉ பிணைந்து குரவை ஆடினர். [7]
  • குன்றக்குரவை ஆடப்பட்டபோது தொண்டகம், சிறுபறை ஆகியவை முழங்கின. கொம்பு ஊதினர். மணி அடித்தனர். [8]

குரவை

[தொகு]
  • நறவு உண்டு குரவை ஆடினர் [9]
  • வாணன் ஆண்ட சிறுகுடி என்னும் ஊரின் நீர்த்துறையில் குரவை ஆடினர் [10]
  • மணல்வெளியில் வாயால் ஊதிக்கொண்டு (தெள்விளி) ஆடினர். [11]
  • புகார் நகரத்தில் இந்திரவிழாவில் குரவையாடிய மகளிர் வேகவைத்த பயறுகள், நோலை என்னும் எற்றுருண்டை, பொங்கல் முதலானவற்றைப் படையல் செய்து வைத்துக்கொண்டு குரவையாடினர் [12]
  • போர்க்களத்தில் ஆடினர் [13]
  • தலையில் குழையும் மார்பில் கோதையும் கையில் தொடியும் அசைந்தாட ஆடினர் [14]
  • அரசன் தேருக்கு முன் ஆடுவது முன்தேர்க்குரவை [15]
  • ஏறுதழுவி முடிந்தபின் ஆடினர். [16]
  • வேங்கை முற்றத்தில் ஆடினர். [17]
  • அரசரும் ஆடினர். [18]
  • விளக்கொளியில் முழவை முழக்கிக்கொண்டு ஆடினர். [19]
  • காஞ்சி நிழலில் ஆடினர். [20]
  • காதலியுடன் மீண்ட காதலனை வாழ்த்திப் பாடி ஆடினர். [21]
  • குரவை ஆட்டத்தில் குழல் ஊதுவர். [22]
  • பொய்தல் விளையாட்டுக்குப் பின்னர் ஆடினர். [23]
  • நாள்தோறும் துணங்கை ஆடுவர். [24]
  • ஆடும்போது அயலார் குறுக்கீடும் நிகழும். [25]

ஆட்டம் பற்றிய தொடர்கள்

[தொகு]
  • துணங்கையஞ்சீர் – துணங்கை ஆடுபவர் பாடும் பாடல் [26] சீராக அசைந்தாடுவது. சாய்ந்தாடுவது.
  • குரவைக்கொளை – துணங்கையஞ்சீரின் மற்றொரு பெயர். [27] துள்ளிக்குதித்து ஆடுவது.
  • வெறிக்குரவை – தும்பை சூடி ஆடப்படும். [28]
  • தலைக்கை தருதல் – ஆண் பெண்ணின் கையைப் பற்றிநிற்கையில் பெண் சுழலுதல். [29]
  • கால்பெயர்த்தாடல் – கால் தப்படி [30]

காட்சியகம்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. ஆசாரிய நிகண்டு தொகுதி 9 – பாடல் 12-13
  2. கதவம் காக்கும் கணை எழு அன்ன, நிலம்பெறு திணிதோள் உயர ஓச்சி, பிணம் பிறங்கு அவையத்துத் துணங்கை ஆடி – பதிற்றுப்பத்து 45
  3. மேற்படி ஆசிரிய நிகண்டு
  4. கலித்தொகை 83
  5. தழூஉப்பிணை மன்றுதொறும் நின்ற குரவை – மதுரைக்காஞ்சி 614
  6. துணங்கையந் தழூஉவில் மணங்கமழ் சேரி மதுரைக்காஞ்சி – அடி 327
  7. மதுரைக்காஞ்சி 614
  8. சிலப்பதிகாரம் காதை 24 குன்றக்குரவை
  9. மலைபடுகடாம் 322
  10. அகம் 269
  11. மதுரைக்காஞ்சி 97
  12. சிலப்பதிகாரம் – காதை 5 இந்திரவிழவூர் எடுத்த காதை
  13. பதிற்றுப்பத்து 45, திருமுருகாற்றுப்படை 56
  14. நற்றிணை 50
  15. தேரோர் வென்ற கோமான் முன்றேர்க் குரவை தொல்காப்பியம் 1022
  16. கலித்தொகை 106
  17. புறம் 126
  18. பதிற்றுப்பத்து 57
  19. பதிற்றுப்பத்து 52
  20. அகம் 336
  21. பரிபாடல் 70
  22. கலித்தொகை 108
  23. ஐங்குறுநூறு 181
  24. குறுந்தொகை 364
  25. நற்றிணை 50
  26. மதுரைக்காஞ்சி 26, 160
  27. புறம் 396.
  28. புறம் 22
  29. பதிற்றுப்பத்து 13
  30. புறம் 359