வள்ளிக்கூத்து
தோற்றம்
வள்ளிக்கூத்து என்பது சங்ககாலத் தமிழர் ஆடிய ஒருவகைக் கூத்தாகும்.[1] ஆநிரைகளைக் கவரச் செல்லும் பொழுது, நாட்டிற்கு வளமும் வெற்றியும் தருமாறு 'வள்ளிக் கூத்தினை வீரர்கள் ஆடுவர். வாடும் இயல்புடைய வள்ளிச் செடியிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இதனை 'வாடா வள்ளி'[2] எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.
இதனை
- வாடா வள்ளியின் வளம்பல தரூஉம் நாடு [3] என பெரும்பாணாற்றுப்படை குறிக்கின்றது.
எப்படி ஆடினர்
[தொகு]மகளிர் முருகனுக்காக வெறிக் கூத்து ஆடுவது வள்ளி என்னும் புறப்பொருள் துறை ஆகும். இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
- வேண்டுதி யான் ஈயும் விழைவோ விழுமிதே
- ஈண்டு இயம் விம்ம இன வளையார் - பூண் தயங்கச்
- சூலமோடு ஆடும் சுடர்ச் சடையோன் காதலர்க்கு
- வேலனோடு ஆடும் வெறி. [4][5]
பாடலின் செய்தி
[தொகு]யாம் ஆடும் வெறி ஆட்டத்தை நீ விரும்புகிறாய். என் விழுப்பம் விழுமியது. என்று வேண்டிக்கொண்டு வளையல் அணிந்த மகளிர் வள்ளிக் கூத்து ஆடுகின்றனர். முலைப்பூண் குலுங்க ஆடுகின்றனர். சுடர்ச் சடையான் சிவன் மகன் முருகனுக்காக ஆடுகின்றனர். முருகன் உருவில் வேல் வைத்திருக்கும் சாமியாடி வேலனோடு சேர்ந்து ஆடுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ முனைவர் பாக்யமேரி, ஆயகலைகள், பக்கம் 16.(வெளியீடும் ஆண்டும் தெரியவில்லை)
- ↑ தொல்காப்பியம்; பொருளதிகாரம்; புறத்திணை; 5
- ↑ பெரும்பாணாற்றுப்படை (370-371)
- ↑ புறப்பொருள் வெண்பா மாலை பாடாண் திணை பாடல் 41
- ↑ PDF பக்கம் 136