ராஜா ராணி ஆட்டம்
ராஜாராணி ஆட்டம் என்பது கரகாட்டத்தின் துணை ஆட்டமாக இது நிகழ்கிறது. ராஜாவும், ராணியுமாக கலைஞர்கள் நடிக்கும் நிகழ்ச்சியாதலால், இதனை ராஜா ராணி ஆட்டம் என்பர். பொழுது போக்கு சார்ந்த இந்நிகழ்ச்சியானது, தஞ்சை மாவட்டப் பகுதியிலேயே நிகழ்ந்தது. ராஜாவும் ராணியும் சந்தித்து வழக்காடுவது, பின்னர் திருமணம் செய்து கொள்வது ஆகிய நிகழ்ச்சிகள், பாட்டும் உரையாடலுமாக[1] , இக்கலை நடக்கும். இக்கலையை, இன்று நடைமுறையில் நிகழ்த்துவது மிக அரிதாகவே உள்ளது.
தென் தமிழகத்தின் சில பகுதிகளில் ராஜா ராணி ஆட்டம் நடத்தப்படுகிறது. அங்கு நடக்கும் இந்த ஆட்டத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு ஆடுகின்றனர். இதற்காக இந்த ஆண்கள் நீண்ட கேசம் வளர்க்கின்றனர். மேலும் சாதி ஒடுக்குமுறையால் மோசமாக பாதிக்கப்பட்ட கலைஞர்களாகவும் இவர்கள் உள்ளனர்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". 2012-01-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ கா.சு.வேலாயுதன், கரு.முத்து, சோபியா, என்.சுவாமிநாதன் (11 ஏப்ரல் 2018). "மெல்லக் கொல்லப்படும் நாட்டுப்புறக் கலைகள்: அனைத்துத் துறை கலைஞர்களும் பங்கேற்கும் கலாச்சார திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்". கட்டுரை. தி இந்து தமிழ். 18 ஏப்ரல் 2018 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: multiple names: authors list (link)