ஆலி ஆட்டம்
Jump to navigation
Jump to search
![]() |
விக்சனரியில் ஆலி என்னும் சொல்லைப் பார்க்கவும். |
ஆலி ஆட்டம் என்பது, ஆலி எனப்படும் பூத வடிவில் அமைந்த உள்ளீடற்ற ஒரு உருவ வடிவுக்குள் ஒரு மனிதன் நுழைந்து கொண்டு ஆடும் ஆட்டமாகும். இந்த ஆலிகள் மூங்கிலாலும், காகிதத்தாலும் செய்யப்பட்டிருக்கும். அதற்கு வண்ணம் தீட்டித் தலையில் மாட்டிக்கொண்டு கலைஞர்கள் ஆடுவர். அதனுடன் கரடி, புலி, கிழவி போன்ற வேடங்களையும் புனைந்து ஆடுவர். இவ்வாட்டத்தில் ஆண்களே, பெண் வேடமணிந்து ஆடுவர்.[1] இது குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ஆட்டமாகும். இவ்வாட்டமானது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக நிகழ்கிறது. இது கோவில்களில் திருவிழாக்க்களின் போது நடத்தப்படுவதோடு, பிற நிகழ்ச்சிகளில் சமூகம் சார்ந்ததாகவும் நடத்தப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". 2012-01-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)