ஜிக்காட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜிக்காட்டம் தமிழர் ஆட்டக்கலைகளுள் ஒன்றாகும். இந்த ஆட்டத்திற்கான பெயர், முன்பு ஜிக்குஅடி என்று அழைக்கப்பட்டது. ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் இசைக்கருவியை வாசித்தல் என்ற தன்மை மட்டும்தான் இருந்தது அதற்குப் பிற்காலத்தில், இசைக்கேற்ப ஆட்ட முறையையும் சேர்த்துக் கொண்டு, ஆடியதால் ஜிக்காட்டம் என்று பெயர்பெற்றது. இசையின் ஒலி நயத்தைக் கொண்டு (ஜக்கு, ஜிக்கு) ஜிக்காட்டம் என்று பெயர் பெற்றது.

ஐந்து வகையான ஆட்டமுறைகள், இவர்களிடம் உள்ளது.

  1. தப்பாட்டம் (தப்பை கையில் வைத்துக்கொண்டு ஆடுதல்),
  2. தெம்மாங்கு (கையில் துணியை வைத்துக்கொண்டு ஆடுவது),
  3. ஒயிலாட்டம் (கையில் கோல் வைத்துக்கொண்டு ஆடுவது),
  4. டிஸ்கோ (மேற்கத்திய முறையில் ஆடுவது),
இந்த ஆட்டத்தை குறைந்தபட்சம் மூன்று பேர் அதிகபட்சம் எட்டு பேர் ஆடுகின்றனர். பதினோறு பேர் இசைக்கருவிகள் வாசிப்பவர்களாக உள்ளனர். பல்வேறு வகையான ஆட்ட அடவுமுறைகள் உண்டு. விசில் ஒலிக்கேற்ப, அடவு முறைகள் மாறும். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிக்காட்டம்&oldid=2304555" இருந்து மீள்விக்கப்பட்டது