புலி ஆட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம் புலி ஆட்டம் ஆகும். வரிப் புலி போல் மஞ்சள், கறுப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுக்களால் உடலைப் பூசுவர். புலிமுகமுடைய முகம்மூடி, புலிக்காது, புலிவால், புலி நகங்கள் ஆகியவை அணிவர். காலில் சலங்கையும் கட்டுவர்.[1] இந்த ஆட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் ஆடப்படுகிறது.

புலி ஆட்டத்தை ஒத்து, கரடி ஆட்டம், மாடு ஆட்டம், கிளி ஆட்டம் போன்ற பிற ஆட்டங்களும் உண்டு.

பரணி பரணி
இதனைப் பரணி என்னும் பெயருடன் கார்த்திகை ஒளிவிளக்குத் திருநாளுக்கு முதல்நாள் பரணிநாளில் விளையாடுவர்.
வால்புலி
புலியின் வால் நீண்டதாகக் கட்டப்பட்டு அதனை வால்பிடிப்பவர் தூக்கிக்கொண்டு அங்குமிங்கும் ஓட விளையாடுதல் இதன் நாட்டுப்புற விளையாட்டு ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்" இம் மூலத்தில் இருந்து 2012-01-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120111173946/http://tnfolkarts.in/folk.php. 


உசாத்துணை[தொகு]

  • கே. தனசேகரன். (2006). கிராமியக் கலைகள். சென்னை: திருவரசு புத்தக நிலையம்.
  • இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு-விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலி_ஆட்டம்&oldid=3587663" இருந்து மீள்விக்கப்பட்டது