ஒயில் கும்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒயில் கும்மி என்பது, ஒயிலாட்டத்துடன் கையில் கும்மியடித்துக் கொண்டே ஆடும் ஒருவகை ஆட்டமாகும்[1]. குறைந்த அளவிலான அசைவுகளைக் கொண்ட ஒருவகைக் கும்மி ஆட்டமாகும்.இது ஒயிலாட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய கலை ஆகும். நாட்டுக் கொட்டு ஆட்டம் என்றும், இக்கலை அழைக்கப்படுகிறது.[2]இவ்வாட்டத்திற்கென, தனியானப் பயிற்சிகள் எதுவும் இல்லை. இக்கலையில் பானைத்தாளம், தோற்பானைத்தாளம் , சிங்கி ஆகிய இசைக்கருவிகளுள், ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்துகின்றனர் . இந்நிகழ்ச்சியில் இடையர் , கள்ளர் போன்ற இடைநிலைச் சாதியினரே பங்கேற்கின்றனர் .வேளாண் தொழிலில் செழிப்பு வேண்டியும் , வெப்ப நோய் குறைய வேண்டியும், மழையை எதிர்நோக்கியும், ஒயில் கும்மி நிகழ்த்தப்படுகிறது .


ஆடும் முறை[தொகு]

ஒயில் கும்மியில் 10 பேர் வட்டமாக நிறபர். அல்லது இருவரிசையில் பத்து முதல் பன்னிரண்டு பேராக நிற்பதும் உண்டு. வேட்டியைப் பஞ்சகச்சம் வைத்துக் கட்டி, வண்ணச்சட்டை, தலையில் குஞ்சம் வைத்த தலைப்பாகை, கழுத்தில் பட்டை ஆகியவற்றைக் கட்டியிருப்பர். வாத்தியார் எனப்படும் குரு இவர்களின் எதிர் நிற்பார். இவரே பாட்டையும் ஆட்டத்தையும் துவக்கி வைப்பார். குழுவினர் ஆளோடு ஆள் உரசாமல் ஒரு முழம் இடைவெளியில் நின்று பாடிக்கொண்டே ஆடுவர். இந்த ஒயில் கும்மியில் வரும் பாடல்கள் பொதுவாக சங்கராபரணம் இராகத்தில் அமையும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஏ. என். பெருமாள், தமிழர் இசை, பக் 701.
  2. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". மூல முகவரியிலிருந்து 2012-01-11 அன்று பரணிடப்பட்டது.
  3. தமிழ் இசை மரபு பக்கம் 127-128
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒயில்_கும்மி&oldid=3237240" இருந்து மீள்விக்கப்பட்டது