கரடியாட்டம்
கரடியாட்டம் என்பது, கரகாட்டத்தின் துணை ஆட்டமாகக் கருதப்படுகிறது. இது கரடி போன்று வேடமிட்டு ஆடும் ஆட்டம் ஆகும். இந்த ஆட்டம் ஆடுபவர்கள் முகத்தில் இறந்த கரடியின் முகத்தையோ அல்லது கரடி முகமூடியையோ அணிந்து கொள்வர். உடல் மீதும் தோல் ஆடையையோ அல்லது கரடி போன்ற பொய் முடிகளுள்ள ஆடையையோ அணிந்து கொள்வர். இந்த ஒப்பனையை, ஆடவர் மட்டுமே போட்டுக் கொண்டு நடனமாடுவர்.[1] சேலம் மாவட்டத்தில், நாட்டார் தெய்வக்கோவில் விழாக்களில், தெய்வ அருளுக்காகவும் இந்த ஆட்டம் நிகழ்த்தப்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". 2012-01-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-06-15 அன்று பார்க்கப்பட்டது.