ஒப்பனைப் பொருட்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித உடலை அலங்கரிக்க, அழகாக காட்சிப்படுத்த, உடலைப் பாதுகாக்க ஒப்பனைப் பொருட்கள் பயன்படுகின்றன. பொதுவாக ஒப்பனைப் பொருட்கள் வேதியியல் சேர்மங்களால் தயாரிக்கப்பட்டதாகவோ அல்லது இயற்கை மூலங்களில் இருந்து செயற்கையாக தருவிக்கப்பட்டவைகளாகவோ இருக்கின்றன[1] நடனம் ஆடுவோர், நாடகம் நடிப்போர் மட்டுமல்லாமல் அன்றாட வாழ்விலும் மனிதர்கள் தம் அழகை வெளிப்படுத்த ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பெண்கள் இவற்றைப் பயன்படுத்தி அழகு செய்வதில் கூடிய ஈடுபாடு கொண்டுள்ளனர்.

பூ, மஞ்சள், எண்ணெய் போன்றவை தொன்று தொட்டே பயன்படுத்தப்பட்டன. அண்மைக் காலங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் பலதரப்பட்ட ஒப்பனைப் பொருட்களை சந்தைக்கு கொண்டுவந்துள்ளன. இவற்றுள் பல பயனரின் அல்லது பிறரின் உடல் நலத்துக்குக் கேடு விளைவிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக சில வாசனைத் திரவியங்கள் பலருக்கு ஒவ்வாமையை உண்டுபண்ண வல்லது.

பட்டியல்[தொகு]

கண் மை

மேற்கோள்கள்[தொகு]

  1. Günther Schneider, Sven Gohla, Jörg Schreiber, Waltraud Kaden, Uwe Schönrock, Hartmut Schmidt-Lewerkühne, Annegret Kuschel, Xenia Petsitis, Wolfgang Pape, Hellmut Ippen and Walter Diembeck "Skin Cosmetics" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a24_219

இவற்றையும் பாக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்பனைப்_பொருட்கள்&oldid=2916954" இலிருந்து மீள்விக்கப்பட்டது