ஒய்யாரம்
ஒய்யாரம் (Fashion) என்பது மக்களால் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வரும் பிரபலமான ஆடை வடிவமைப்பு அல்லது பிரபலமான ஆடையணியும் பாணியாகும். புதுப்பாங்கு என்று ஒய்யாரத்திற்கு இணையாக அழைக்கப்படும் இந்நடைமுறை குறிப்பாக ஆடை, காலணி, ஆபரணங்கள், ஒப்பனை அல்லது உடலை அலங்கரித்துக் கொள்ளும் முறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும், ஒய்யாரம் என்பது தனித்துவமானதும் ஆடை உடுத்திக் கொள்வதில் பெரும்பாலும் அடிக்கடி மாறாத போக்கும் கொண்டதாகும். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியிலும் சூழலிலும் பிரபலமாக இருக்கும் உடை வகைகள், கட்டிட அமைப்புகள், ஓவியப் பாணிகள், அலங்காரப் போக்குகள், இசை வடிவங்கள், விருந்தோம்பல் முறைகள் ஆகியன ஒய்யாரத்துடன் தொடர்புடையனவாகக் கருதப்பட்டன. பின்னர் ஒய்யாரம் கால சூழல்களுக்கேற்ப மாறி அமைகின்றது. புதிய ஒய்யார வடிவங்களும் நாளுக்கு நாள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
நடைமுறையில் உள்ள பாங்குகள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களின் புதிய படைப்புகளும் ஒய்யாரம் என்ற சொல்லில் உள்ளடங்கும் [1]. மேலும் ஒய்யாரம் என்ற சொல்லுடன் ஆடையலங்காரம் என்ற தொழில்நுட்ப ரீதியான சொல் இணைக்கப்பட்டுள்ளதால் ஒய்யாரம் என்ற சொல்லின் பயன்பாடு ஆடம்பரமான ஆடை அலங்காரம் அல்லது முகமுடி அணிந்த உடை என்பது போன்ற சிறப்புப் பொருளைப் பெறுகிறது. எனவே ஒய்யாரம் என்பது பொதுவாக ஆடை அலங்காரத்தையும் அதைப்பற்றிய ஆய்வினையும் குறிப்பதாக அமைகிறது. பெண் அல்லது ஆண்களுக்கான ஆடையலங்காரப் போக்குகள் ஒய்யாரத்துடன் தொடர்புடையனவாகக் கருதப்படுகின்றன. சில சமயங்களில் பால்வேறுபாடற்ற ஆண்பெண் ஆடையலங்காரமும் இதில் இடம்பெறுகிறது [2][3].
ஆடையலங்கார ஒய்யாரம்
[தொகு]பெர்சியா, துருக்கி, இந்தியா அல்லது சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட ஆரம்பகால மேற்கத்திய பயணிகள், அந்த இடங்களில் ஆடை அணியும் பாணியில் மாற்றங்கள் ஏதுமில்லை என்று அடிக்கடி குறிப்பிட்ட்டுள்ளார்கள். ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சப்பானிய ஆடைகள் மாறவில்லை என்று 1609 ஆம் ஆண்டில் சப்பானிய இராணுவ தளபதி சோகனின் செயலாளர் (முற்றிலும் துல்லியமாக அல்ல) எசுப்பானிய பார்வையாளர் ஒருவருக்கு என்று கூறியுள்ளார் [4]. இருப்பினும், சீன ஆடைகளில் வேகமாக மாறும் பாணி இருந்துள்ளதாக மிங் சீனாவில் கணிசமான ஆதாரங்கள் உள்ளன [5]. பண்டைய ரோம் மற்றும் இடைக்கால கலிபாக்கள் காலத்தில் பொருளாதார அல்லது சமூக மாற்றங்களின் அடிப்படையில் பெரும்பாலும் அணியும் உடைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. 11 ஆம் நூற்றாண்டில் துருக்கியர்களின் வருகைக்குப் பின்னர் மத்திய ஆசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளிலும் இத்தகைய ஆடையணியும் பாணிகளில் இதே போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன[6].
ஐரோப்பாவில் தொடங்கி படிப்படியாக அதிகரித்த தொடர்ச்சியான மற்றும் வேகமான ஆடையலங்கார மாற்றங்களை மிகவும் நம்பத்தகுந்த வகையில் தேதியிட்டுக் கூற முடியும். மேற்கத்திய பாணியின் தொடக்கம் 14 ஆம் நூற்றாண்டின் நாகரிகத்திலிருந்து தொடங்குவதாக யேம்சு லாவர் மற்றும் பெர்னாண்ட் பிரவுடல் உள்ளிட்ட வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்[7][8]. இருப்பினும் அவர்கள் சமகால சித்திரங்களை பெரிதும் நம்பினர்[9]. பதினான்காம் நூற்றாண்டிற்கு முன்னரான கையெழுத்துப் பிரதிகள் எதுவும் பொதுவில் இல்லையென்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் வியத்தகு முறையில் ஏற்பட்ட ஆரம்பகால ஆடையில் ஏற்பட்ட மாற்றமானது திடீரென்று குறுகியது. ஆண்களின் மேலங்கி கெண்டைக்கால் சதை நீளத்திலிருந்து பின்புறத்தை மூடும் அளவுக்கு இறுக்கமடையச் செய்தது [10]. சில நேரங்களில் அது பெரியதாக இருக்கும்படி செய்ய மார்பில் ஒரு திணிப்பையும் சேர்த்துக் கொண்டது. இதன் விளைவாக கால்சட்டையின் மீது அணியப்படும் சட்டை என்ற ஒரு தனித்துவமான மேற்கத்திய அடையாளம் உருவானது.
இம்மாற்றத்தின் வேகம் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் கணிசமாக அதிகரித்தது, குறிப்பாக பெண்கள் மற்றும் ஆண்களின் ஆடை அலங்காரப் பாங்கில் இந்த மாற்றம் நிகழ்ந்தது. அதிலும் குறிப்பாக முடி மற்றும் ஆடை அலங்காரம் சிக்கலானது. எனவே, குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்த படங்களை பெரும்பாலும் ஐந்து வருடங்களுக்குள் நம்பிக்கையையுடனும் துல்லியமாகவும் கலை வரலாற்றாசிரியர்களால் கணக்கிட முடிந்தது. தொடக்கத்தில், ஐரோப்பாவின் மேல் வகுப்பு மக்ககளிடையில் துண்டு துண்டாக இருந்த ஒய்யார பாணி மாற்றங்கள் தொடர்ந்து நாளடைவில் மாற்றமடைந்து தனித்துவமான தேசிய பாணிகளாக வளர்ச்சிபெற வழிவகுத்தது.17 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை இத்தேசிய பாங்குகள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. இவை பெரும்பாலும் பண்டைய பிரான்சு பலுதியிலிருந்து உருவானவையாகும் [11]. செல்வந்தர்கள் வழக்கமாக ஒய்யார பாணியை வழிநடத்தியிருந்தாலும் நவீன ஐரோப்பாவின் ஆரம்பத்தில் அதிகரித்து வந்த செல்வந்தர்களும் முதலாளித்துவ வர்க்கத்தினரும் ஏன் விவசாயிகளும் கூட இத்தகைய ஒய்யார பாணிகளிடம் நெருங்காமல் சற்று விலகியே இருந்தனர். ஆனால் உயரடுக்கில் இருப்பவர்கள் இன்னும் கூட இப்பாணியை அசௌகரியமாகவே கருதுகின்றனர். ஒய்யார பாணியில் நிகழும் மாற்றங்களை இயக்குவதில் இதுவும் ஒரு காரணியாகும் என்று பெர்னான்ட் பிரேடால் கூறுகிறார் [12]
16 ஆம் நூற்றாண்டில் ஆடை அலங்காரத்தில் தேசிய வேறுபாடுகள் மிகவும் அதிகமாக இருந்தன.16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 10 செருமானிய அல்லது இத்தாலிய மனிதர்களின் ஓவியங்களில் பத்து முற்றிலும் வேறுபட்ட தொப்பிகள் அணிவிக்கப்பட்டிருந்தன. ஆல்பிரெஃக்ட் டியூரெ தன்னுடைய ஓவியங்களில் இந்த வேறுபாடுகளை நியூரம்பெர்க் மற்றும் வெனிசு நகரங்களின் 15 ஆம் நூற்றாண்டு படங்களில் இம்மாறுபாடுகள் தெரியும் வண்ணம் சித்தரித்திருக்கின்றார். ஐரோப்பாவின் மேல்தட்டு மக்களிடம் எசுப்பானிய பாணி ஒய்யாரம் 16 ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் தொடங்கியது. 17 ஆம் நூற்றாண்டில் ஒரு பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து ப்ரெஞ்சு பாணியிலான ஒய்யாரம் வளர்ச்சியடைந்து 18 ஆம் நூற்றாண்டில் ஒரு நிறைவை அடைந்தது[13].
உடைகளின் நிறங்கள் மற்றும் வடிவமைப்புகள் ஆண்டுதோறும் மாறிக்கொண்டே இருந்தாலும் [14] ஆண்களின் மேல் அங்கியும், அரைச்சட்டையின் நீளமும் அல்லது ஒரு பெண்ணின் உடை வடிவமைப்பும் மிக மெதுவாகவே மாற்றமடைந்தன. ஆண்களுக்கான நாகரீக ஒய்யாரங்கள் பெரும்பாலும் இராணுவ மாதிரிகளிலிருந்து பெறப்பட்டன, ஐரோப்பிய ஆண் நிழற்படங்களிலுள்ள மாற்றங்கள் ஐரோப்பிய போர் காட்சிகளிலிருந்து உருவானவையாகும். அங்கிருந்து இராணுவ அலுவலர்கள் கழுத்துப்பட்டை போன்ற வெளிநாட்டுப் பாணிகளைக் கவனிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றிருந்தனர்.
16 ஆம் நூற்றாண்டில் இருந்தே பிரான்சிலிருந்து ஆடை அணிந்த பொம்மைகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தாலும், 1620 களில் ஆபிரகாம் பாசே புதுமைப்பாங்குடன் பொம்மைகளை உற்பத்தி செய்தார். 1780 களில் இம்மாற்றத்தின் வேகம் சமீபத்திய பாரிசு பாணியிலான ஒய்யாரத்துடன் அதிகரித்தது. 1800 வாக்கில், அனைத்து மேற்கத்திய ஐரோப்பியர்களும் ஒரே வகையான எண்ணத்துடன் ஆடை அணிந்தனர். உள்ளூர் வேறுபாடு முதன்முதலாக மாகாண கலாச்சாரத்தின் அடையாளமாக மாறியது. பின்னர் அது பழமைவாத விவசாயிகளின் உடைமை ஆனது [16].
தையல்காரர்களும், ஆடை வடிவமைப்பாளர்களும் பல கண்டுபிடிப்புகளுக்குப் பொறுப்பானவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உடைத் தொழிற்சாலையினர் நிச்சயமாக பல புதுமைப் போக்குகளுக்கு வழிவகுத்தனர். ஒய்யார ஆடை வடிவமைப்பு வரலாறு பொதுவாக 1858 முதல் புரிந்து கொள்ளப்பட்டது. ஆங்கிலேய நாட்டில் பிறந்த சார்லசு பிரடெரிக் வொர்த் பாரிசு நகரில் உண்மையான ஒய்யார ஆடை வடிவமைப்பு இல்லத்தைத் திறந்துவைத்தார். ஒய்யார வடிவமைப்பு இல்லங்களுக்கான தொழிற்துறை தரநிலையாக இந்த இல்லத்தின் பெயரே அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. ஆடைகளை தயாரிப்பதற்கு குறைந்த பட்சம் இருபது பணியாளர்களை வைத்திருப்பது, ஆடையலங்கார அணிவகுப்பு காட்சிகளில் ஆண்டிற்கு இரண்டு தொகுப்புகளைக் காட்டுவது, சில குறிப்பிட்ட வகை மாதிரி ஆடை வடிவமைப்பு வகைகளை வடிவமைப்பாளர்களுக்கு வழங்குதல் போன்ற தரநிலைகளை ஒய்யார வடிவமைப்பு இல்லங்கள் கடைப்பிடிக்க வேண்டும் [17].அப்போதிலிருந்து பிரபலமான வடிவமைப்பாளரின் ஆலோசனைகள் பெருகி ஒய்யார வடிவமைப்பு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது [18].
இருபாலரும் அணிந்து கொள்ளக்கூடிய ஆடைகளை உருவாக்கும் உத்தி 1960 களில் தோற்றுவிக்கப்பட்டது. பியர் கார்டின் மற்றும் ரூடி கெர்ன்ரிச் போன்ற வடிவமைப்பாளர்கள் ஆண்களும் பெண்களும் அணிந்து கொள்ளக்கூடிய நீண்ட கால்சட்டைகள் போன்ற ஆடைகளை உருவாக்கினர். இருபாலர் அணியும் உடையின் தாக்கம் இருபால் மனிதர், பேரளவு சந்தைப்படுத்தல், கருத்துமுறை உடுத்துதல் என ஒய்யார உலகில் மிகப்பரவலாக விரிவடைந்தது [19].
செம்மறியாட்டுத் தோலாடைகள், பறக்கும் மேலாடைகள், கம்பளி மேலாடைகள் போன்றவை 1970 களின் ஒய்யாரப் போக்குகளாக இருந்தன. இத்தகைய வடிவமைக்கப்படாத உடைகளை ஆண்கள் சமுதாயக் கூடல் விழாக்களில் உடுத்தினர். பழமைவாத போக்குக்கு மாறாக சில ஆண்களின் உடை அணியும் பாணி உணர்வுகளைத் தூண்டுதல் மற்றும் உடல் கட்டமைப்பை வெளிக்காட்டும் தன்மையும் ஆகியவை கலந்தன. வளர்ந்து வரும் ஓரினச் சேர்க்கையாளர் இயக்கமும், இளைஞர்களும் புதிய பானியிலான உடை அலங்காரத்திற்கு வலுவூட்டினர். மெல்லிய துணிகளாலான உடைகளை அணிய முற்பட்டனர். முன்னதாக இத்தகைய துணிகள் பெண்களுக்கான உடைகளாக வடிவமைப்பாளர்கள் உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் [20].
பாரிசு, மிலன், நியூயார்க் நகரம் மற்றும் இலண்டன் ஆகிய நான்கு பெரிய நகரங்கள் ஒய்யார வடிவமைப்புகளின் நடப்பு தலைநகரங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவை அனைத்துமே மிகப் பெரிய ஒய்யார உடை நிறுவனங்களுக்கான தலைமையகங்களாகும். மேலும் இவை நான்கும் உலகளாவிய பாணியிலான உடை வடிவமைப்பில் மிகுந்த செல்வாக்கும் புகழும் பெற்றவையாகும். இந்நகரங்களில் ஒய்யார வாரங்கள் என்னும் வாராந்திர நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆடை வடிவமைப்பாளர்கள் தாங்கள் உருவாக்கிய புதிய பாணியிலான உடைகளை பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்துகின்றனர். முன்னணி ஆடை வடிவமைப்பாளர்கள் பாரிசு நகரை மையமாகக் கொண்டு உலகின் பார்வையை பாரிசு நகரின் பக்கம் திருப்புகின்றனர்.
நவீன மேற்கத்தியர்கள் தங்கள் ஆடைகளை தேர்ந்தெடுப்பதற்கு ஏராளமான தேர்வுவாய்ப்புகள் தற்காலத்தில் உள்ளன. ஒரு நபர் தான் அணியத் தேர்வு செய்யும் உடையில் அவரின் ஆளுமை அல்லது ஆர்வங்களைப் பிரதிபலிக்கிறது. உயர்ந்த கலாச்சார நிலையை உடைய மக்கள் புதிய அல்லது வேறுபட்ட ஆடைகளை அணிய ஆரம்பிக்கும்போது ஒரு புதிய ஒய்யாரப் போக்கு தொடங்குகிறது. இந்த நபர்களை விரும்புகிறவர்கள் அல்லது மதிக்கிறவர்கள் தங்கள் சொந்த பாணியிலான அலங்காரத்தில் பாதிக்கப்பட்டு அவர்கள் அணியும் அதேபோன்ற பாணியிலான ஆடைகளை அணிந்துகொள்வார்கள். வயது, சமூக வர்க்கம், தலைமுறை, ஆக்கிரமிப்பு மற்றும் புவியியல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சமூகத்தின் ஒய்யார உடைகள் வேறுபடுகின்றன மற்றும் காலப்போக்கில் மாறுபடுகின்றன. இளம் வயதினரைப் போல் உடுத்திக் கொள்ளும் முதியவர்கள் சமூகத்தின் பார்வையில் ஒரு மோசமானவராகக் கூடத் தோன்றலாம்.
சமீபத்திய ஆண்டுகளில் ஆசியாவிலும் ஒய்யார உடைகள் உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தைகளில் பெருகி முக்கியத்துவம் பெற்றுள்ளன. சீனா, சப்பான், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்த பாரம்பரிய உடை வடிவமைப்பாளர்களிடத்தில் மேற்கத்திய உடை வடிவமைப்பாளர்களின் தாக்கமும் தலையீடும் அதிகரித்துள்ளன. ஆனாலும் ஆசிய ஆடை வடிவங்கள் தங்கள் சுய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு செல்வாக்கு செலுத்துகின்றன [21].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fashion (2012, March 29). Wwd. (n.d.). Retrieved from http://www.wwd.com/fashion-news.
- ↑ Undressing Cinema: Clothing and identity in the movies – Page 196, Stella Bruzzi – 2012
- ↑ For a discussion of the use of the terms "fashion", "dress", "clothing", and "costume" by professionals in various disciplines, see Valerie Cumming, Understanding Fashion History, "Introduction", Costume & Fashion Press, 2004, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89676-253-X
- ↑ Braudel, 312–13
- ↑ Timothy Brook: "The Confusions of Pleasure: Commerce and Culture in Ming China" (University of California Press 1999); this has a whole section on fashion.
- ↑ Josef W. Meri & Jere L. Bacharach (2006). Medieval Islamic Civilization: A–K. Taylor & Francis. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415966914.
- ↑ Laver, James: The Concise History of Costume and Fashion, Abrams, 1979, p. 62
- ↑ Fernand Braudel, Civilization and Capitalism, 15th–18th Centuries, Vol 1: The Structures of Everyday Life," p317, William Collins & Sons, London 1981
- ↑ Heller, Sarah-Grace (2007). Fashion in Medieval France. Cambridge; Rochester, N.Y.: Boydell and Brewer. pp. 49–50. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781843841104.
- ↑ "Jeans Calças Modelos Ideais". Conceito M. 19 November 2014. Archived from the original on 19 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 April 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Braudel, 317–24
- ↑ Braudel, 313–15
- ↑ Braudel, 317–21
- ↑ Thornton, Peter. Baroque and Rococo Silks.
- ↑ Ribeiro, Aileen (2003). Dress and Morality. Berg. pp. 116–117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781859737828.
- ↑ James Laver and Fernand Braudel, op cit
- ↑ Claire B. Shaeffer (2001). Couture sewing techniques "Originating in mid- 19th-century Paris with the designs of an Englishman named Charles Frederick Worth, haute couture represents an archaic tradition of creating garments by hand with painstaking care and precision". Taunton Press, 2001
- ↑ Parkins, Ilya (2013). "Introduction: Reputation, Celebrity and the "Professional" Designer". Poiret, Dior and Schiaparelli: Fashion, Femininity and Modernity (English ed.). London: Bloomsbury Publishing. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780857853288.
- ↑ Park, Jennifer. "Unisex Clothing." Encyclopedia of Clothing and Fashion. Ed. Valerie Steele. Vol. 3. Detroit: Charles Scribner's Sons, 2005. 382–384. Gale Virtual Reference Library. Web. 22 Sept. 2014. Document URL http://go.galegroup.com/ps/i.do?id=GALE%7CCX3427500609&v=2.1&u=fitsuny&it=r&p=GVRL.xlit.artemisfit&sw=w&asid=6f171eb2ab8928b007d0495eb681099c
- ↑ "Clothing for Men." American Decades. Ed. Judith S. Baughman, et al. Vol. 9: 1980–1989. Detroit: Gale, 2001. Gale Virtual Reference Library. Web. 22 Sept. 2014. Document URL http://go.galegroup.com/ps/i.do?id=GALE%7CCX3468303033&v=2.1&u=fitsuny&it=r&p=GVRL.xlit.artemisfit&sw=w&asid=096fa3676c226cf3c8ae864724bcfa1d
- ↑ Lemire, B., & Riello, G (2008). EAST & WEST: TEXTILES AND FASHION IN EARLY MODERN EUROPE. Journal of Social History, 41(4), 887–916.