பூசாரிக் கைச்சிலம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பூசாரிக் கைச் சிலம்பாட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

பூசாரிக் கைச் சிலம்பாட்டம் அல்லது கைச்சிலம்பு ஆட்டம் என்பது இரண்டு சிலம்புகளை வைத்துக்கொண்டு ஆடும் தமிழக நாட்டுப்புற ஆட்டமாகும். மாரியம்மன் திருவிழாக்களிலும், கிராமிய தேவதைகளின் முன்பும் இவ்வாட்டம் ஆடப்படுகிறது.[1] 'சக்தி கரகம்' எடுத்து வரும்பொழுது மாரியம்மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடிக்கொண்டே இச்சிலம்பாட்டம் ஆடி வருவர். மூன்று பம்பைகள், ஒரு உடுக்கை, நான்கு ஆட்டக்காரர்கள் இவை மூன்றும் சேர்ந்தே இந்தக் கூத்துவர், இதில் எது குறைந்தாலும் கூத்து நடக்காது.[2] கையில் பூசாரிக் கைச்சிலம்பு என்ற இரண்டு வெண்கலத்தால் செய்யப்பட்ட சிலம்பு இசைக்கருவியை வைத்து ஆட்டுவர். காலில் சதங்கையும் கட்டியிருப்பர். பம்பை இசைக்கும், தவில் நாதசுர இசைக்கும் கூட இவர்கள் சிலம்பாட்டம் ஆடுகின்றனர். குருவின் துணையுடன் நையாண்டி, நடநையாண்டி போன்ற மெட்டுகளுக்கு ஏதுவாக ஆடுவர். சிலம்பின் ஒலியும், கால்களின் சதங்கை ஒலியும் நாட்டுப்புற பாடலின் இசையுடன் இணைந்து காண்பவரை ஈர்க்கும் தன்மையுடையது பூசாரி கைச் சிலம்பாட்டமாகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பூசாரிக் கைச்சிலம்பு". 13 சூன் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. கா.சு.வேலாயுதன், கரு.முத்து, சோபியா, என்.சுவாமிநாதன் (2018 ஏப்ரல் 11). "மெல்லக் கொல்லப்படும் நாட்டுப்புறக் கலைகள்: அனைத்துத் துறை கலைஞர்களும் பங்கேற்கும் கலாச்சார திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும்". கட்டுரை. தி இந்து தமிழ். 18 ஏப்ரல் 2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)CS1 maint: multiple names: authors list (link)
  3. தமிழ் இசை மரபு பக்கம் 129

வெளி இணைப்பு[தொகு]