பூசாரிக் கைச்சிலம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பூசாரிக் கைச்சிலம்பு என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். இது நீண்டு வளைந்த வட்ட வடிவமான ஓர் அங்குல குறுக்களவுள்ள பித்தளை அல்லது வெண்கலச் சுருளினுள் சில உலோகக் குண்டுகள் போடப்பட்டு இயங்கும் தாளக் கருவியாகும். கைச்சிலம்பை விரல்களில் ஏற்றி அசைத்து ஆட்டும் போது கலகல என்று சப்திக்கும் ஓசை கேட்க நன்றாக இருக்கும். மாரியம்மன் கோயில்களில் பூசாரிகள் கையிலேந்தி வழிபாட்டின் போது இசைப்பார்கள். கிராமியப்பாடல்களில் கைச்சிலம்புப் பாட்டு என்பது முக்கியமாகும். மாரியம்மன் தாலாட்டுப் பாட்டை பூசாரிகள் இசைக்கும் போது மிக இலகுவாக கைச்சிலம்பை ஒலிக்கச் செய்வர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசாரிக்_கைச்சிலம்பு&oldid=2056394" இருந்து மீள்விக்கப்பட்டது