இருளர் இனமக்களின் ஆட்டம்
Jump to navigation
Jump to search
இருளர் இனமக்களின் ஆட்டம் என்பது, கோயமுத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்ற இருளர் என்ற மலை இன மக்களின் ஆட்டமாகும். தைப்பொங்கலின் போது இவர்கள் குரங்கு , புலி , கரடி போன்ற விலங்குகளின் வேடம் புனைந்து ஆடுவர்.[1] இந்த ஆட்டத்தில் ஆண்கள் , பெண்கள் ஆகிய இருவரும் பங்கு கொள்வர். ஆனால் ஆண், பெண் இருவரும் இணைந்து ஆடுவதில்லை. இந்த ஆட்டமானது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப வேகமாகவும், மெதுவாகவும் ஆடப்படும் இயல்பைப் பெற்றதாக இருக்கிறது. பெண்கள் தங்கள் கைகளை அசைத்து ஆடும் இவ்வாட்டம், மிகவும் அழகு மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.