தலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தலை (ஆங்கிலம்: Head) என்பது உடலின் தொடங்கும் அங்கமாகவும் தலையாய அங்கமாகவும் கருதப்படுகிறது.

முக்கியத்துவம்[தொகு]

மனிதருட்பட்ட எல்லா மிருகங்களுக்கும் (மீன், பறவை, ஊர்வன, பாலூட்டிகள், பூச்சிகள், வண்டுகள், சிலந்திகள் என்று அசைவுள்ள முதுநாணி உள்ளவற்றிற்கும், இல்லாத அனைத்திற்கும்) அதிமுக்கிய உறுப்பான மூளை தலையில் தான் உள்ளது.

உறுப்புகள்[தொகு]

மேலும் தன் சுற்றுச்சூழலை உணரக்கூடிய கண்கள், செவிகள், மூக்கு, வாய் என்ற உருப்புகளும் தலையில் இருப்பது தனிச்சிறப்பு. முதுநாணிகளுக்கு தலையின் வடிவத்தினை உள்ளிருக்கும் மண்டைஓடு காக்கிறது. முதுகுத்தண்டு இல்லா பூச்சிகள் மற்றும் பிற இனங்களுக்கு வெளிப்புற எலும்பின் வடிவே தலையின் வடிவாகிறது.

துண்டானால்[தொகு]

தலையின்றி உயிர்வாழ்தல் இயலாது எனினும் கரப்பான்பூச்சிகள் தலையின்றி வெகு நாட்கள் உயிர் வாழ இயலும். இவை தலையினை இழந்த பின் உணவு உட்கொள்ள வாய் இல்லாதமையால் பட்டினி கிடந்து இறக்கின்றனவே அன்றி தலை இல்லாததன் காரணமாக இறப்பதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலை&oldid=2184050" இருந்து மீள்விக்கப்பட்டது