காவல் தெய்வம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காவல் தெய்வம் என்பது ஒரு ஊரையோ, நிலப்பரப்பையோ, நபரையோ, வம்சத்தையோ, நாட்டையோ, பண்பாட்டையோ, தொழிலையோ காப்பதாக, புரப்பதாக அல்லது இவற்றில் எதற்காவது பொறுப்பானதாகக் கருதப்படும் சிறுதெய்வம் அல்லது அணங்கு ஆகும்.
ஒருவரின் தனிப்பட்ட சிறுதெய்வமான ஜீனியஸ், ஒருவரின் பிறப்புதொட்டு இறப்பு வரையில் தொடரும் டேய்மன் முதலியவை மேற்கத்திய காவல் தெய்வ வகைகளுள் சிலவாகும்.
தமிழர் பண்பாட்டிலும் இலக்கியங்களிலும் காணலாகும் ஐயனார், பல வகை அம்மன், சதுக்கப் பூதம் முதலியன காவல் தெய்வங்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.
ஆசியா[தொகு]
இந்து சமயத்தில், காவல் தெய்வங்கள் இட்டதெய்வம் என்றும் குலதெய்வம் என்றும் வழங்கப்படும். கிராமங்களைக் காக்கும் கிராமத்து காவல் தெய்வங்களும் இவற்றுள் அடங்கும். தேவர்களும் சிறுதெய்வங்களாகக் காணத்தக்கவர்களே.