ஹோ சி மின் நகர மாரியம்மன் கோயில்
மாரியம்மன் கோயில் வியட்நாமின் ஹோ சி மின் நகரினில் அமைந்துள்ளது. இது இங்கு வந்து வணிகம் செய்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினரால் எழுப்பப்பட்டது. வெளி மண்டபத்தில் பார்வதியின் மகன்களான முருகனும் விநாயகரும் பார்வதியின் வலப்புறமும் இடப்புறமும் உள்ளனர். இக்கோவிலின் இராசகோபுரம் 12 மீட்டர் உயரம் கொண்டது. இக்கோபுரத்தில் பல சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபங்களிலும் ஆங்காங்கே இலட்சுமி, முருகன் என்போருடன் பிற தெய்வச் சிலைகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
கோயிலின் முக்கியமான அம்சங்களில் ஒன்று வெளிச் சுவரைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு தெய்வச் சிலைகளாகும். நடராசர், சிவன், பிரம்மா, திருமால், காளி, பிரம்மசக்தி, சாமுண்டி, திருமகள், மகேசுவரி, வாலாம்பிகை, மீனாட்சி, ஆண்டாள், காமாட்சியம்மன், கருமாரியம்மன், சிவகாமி என்பவையே இவை. இவற்றுள் முருகனை மடியில் வைத்திருக்கும் பார்வதியின் சிலையும் உள்ளது.[1]
இங்கு வாழும் ஐம்பது தமிழ்க் குடும்பங்களும் அன்னையின் அருள்பெற்ற வியட்னாமிய, சீன பக்தர்களும் மாரியம்மனை வழிபடுவர்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Hindu temples in VIETNAM", at shaivam.org from Aum Muruga journal
- ↑ "Mariamann Temple: Hinduism Saigon Style" பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம், expatmojo.com", June 11, 2014