நிருத்தம் (பரதநாட்டியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிருத்தம் என்பது பரதநாட்டியத்தில் சுத்த நடனம் ஆகும். இது உடல் அழகையும்[1], உடலின் அழகிய அசைவுகளையும், தாளத்தின் மிக நுணுக்கமான அளவைகளையும், கைகள், விரல்களின் அழகான முத்திரைகளையும், பாதஜால வித்தைகளையும் இசை, அதன் தாள மெல்லின வல்லினங்களையும் உருவகப்படுத்தும் ஒரு கலையாகும்.

சிறப்பு[தொகு]

நிருத்தத்தில் தலையிலிருந்து பாதம் வரை உடலின் எல்லா உறுப்புக்களும் அழகுற இயங்குகின்றன. இக்கலை நாட்டியத்தின் ஒரு பெரும் பகுதியாக அமைந்துள்ளது. பரதநாட்டியத்தில் நிருத்தம் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். போர் புரிதல், தேரோட்டம் என்பன நிருத்தத்திலேயே அவதரிக்கப்பட்டன. நிருத்தம் பிரத்தியேக கருத்து ஒன்றும் வெளிப்படுத்தப்படாமல், கலாரசனைக்காக ஆடப்படுவதால் மிகவும் சுலபமாக எல்லோராலும் ரசிக்கப்படக் கூடியது. இந்நடனம் காண்பவர் மனதை கவர்வது மட்டுமல்லாது, நடனம் ஆடுவோரையும் மிக மென்மையான நிலைக்கு அழைத்துச் செல்லும் தன்மை வாய்ந்தது. நடனத்தில் சிருங்கார ரசம் நிறைந்த காட்சிகளில் நிருத்தம் இன்றியமையாத ஒரு அம்சமாகும். நாட்டியத்தின் ஆரம்பத்தில் ஆராதனை நிகழ்வதை பூர்வாங்கம் என்பர். இதன் விசேட நிகழ்ச்சி நிருத்தமாகும்.

முதல் நிகழ்த்தப்படல்[தொகு]

தேவர்களையும், அசுரர்களையும், மூதாதையரின் ஆத்மாக்களையும் திருப்திப்படுத்த முதலில் நிருத்தம் நிகழ்த்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://www.dailynews.lk/2011/03/30/art10.asp[தொடர்பிழந்த இணைப்பு] நிருத்தம் நடனத்தின் உறுப்பு

வெளியிணைப்புகள்[தொகு]

  1. நிருத்தத்திற்கு உதாரணம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிருத்தம்_(பரதநாட்டியம்)&oldid=3218560" இலிருந்து மீள்விக்கப்பட்டது