சுவாமி தயானந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சுவாமி தயானந்தர் பிறப்பு: ஆகஸ்டு 15, 1930. தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில், மஞ்சக்குடி கிராமத்தில் பிறந்த தயானந்தர் மரபுவழி வந்த அத்வைத வேதாந்த ஆசிரியர். சுவாமி சின்மயானந்தரிடம் 1952-ல் துறவற தீட்சை பெற்று, விஜயவாடா அருகில் உள்ள குடிவாடா எனுமிடத்தில் உள்ள சுவாமி பிரவானந்தரிடம் குருகுலக் கல்வி பயின்ற வேதாந்த மாணவர். சுவாமி தயானந்தர் கடந்த 1972ஆம் ஆண்டு முதல் நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி, தொடர்ந்து அத்வைத வேதாந்த சொற்பொழிவுகள் ஆற்றி வருகிறார். இவரிடம் வேதாந்தம் பயின்ற அறுபது மாணவர்கள் தற்போது தலைசிறந்த வேதாந்த ஆசிரியர்களாக, நாட்டில் பல்வேறு பகுதிகளில் அத்வைத வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.

சுவாமி தயானந்த சரசுவதி, ரிஷிகேசில் “அர்ஷ வித்யா பீடம்” மற்றும் கோவையில் ”அர்ஷ வித்யா குருகுலம்” எனும் இரண்டு முதன்மையான மையங்கள் நிறுவியுள்ளார். மேலும் ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் “அர்ஷ வித்யா குருகுலத்தின் மையம் உள்ளது.

சுவாமி தயானந்தர் தலைசிறந்த வேதாந்த சொற்பொழிவாளர் மற்றும் பல வேதாந்த நூல்களை எழுதிய எழுத்தாளர். மேலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வேதாந்த சொற்பொழிவுகள் ஆற்றுபவர்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

 • [2]அர்ஷ வித்யா பீடம், சுவாமி தயானந்த ஆஸ்சிரமம், ரிசிகேஷ்
 • [3]அர்ஷ வித்யா குருகுலம், கோவை
 • [4] ஆணைக்கட்டி ஆசிரமம்,கோவை
 • [5]சாலிஸ்பரி ஆசிரமம்
 • [6] Friends of AVG Saylorsburg
 • [7] South-America + Spanish-speaking World Website
 • [8] சுவாமி ததாத்மனந்தா, நியூஜெர்சி, அமெரிக்கா
 • [9] Aim For Seva
 • [10] பிரமானா
 • [11] சுவாமி பிரம்மபிரகாசனந்தர், நாக்பூர்
 • [12] சுவாமி பரமார்த்தனந்தர், சென்னை
 • [13] சுவாமி விதித்தாமனந்தர், அகமதாபாத்
 • [14] சுவாமி சத்வித்யானந்தர், நவ்சாரி, குஜராத்
 • [15] சுவாமி ஓங்காரனந்த ஆசிரமம், தேனி, தமிழ்நாடு
 • [16] சுவாமி சித்பவானந்த ஆசிரமம், தேனி, தமிழ்நாடு
 • [17]சுவாமி பரிபூராணந்த சரசுவதி, காக்கிநாடா, ஆந்திரா
 • [18] சுவாமி குருபரானந்தர், சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_தயானந்தர்&oldid=1686286" இருந்து மீள்விக்கப்பட்டது