சுக்தேவ் சிங் திந்த்சா
Appearance
சுக்தேவ் சிங் திந்த்சா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 9 ஏப்ரல் 2010 | |
தொகுதி | பஞ்சாப் |
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை | |
பதவியில் 2004 - 2009 | |
முன்னையவர் | சிம்ரஞ்சித் சிங் மான் |
பின்னவர் | விஜய் இந்தர் சிங்லா |
தொகுதி | சங்குரூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 ஏப்ரல் 1936 சங்குரூர், பஞ்சாப், இந்தியா |
அரசியல் கட்சி | சிரோமணி அகாலி தளம்[1] |
துணைவர் | கர்ஜித் கவுர் |
பிள்ளைகள் | 1 மகன், 2 இரண்டு மகள்கள் |
வாழிடம் | சங்குரூர் |
விருதுகள் | பத்ம பூசண் (2019) |
மூலம்: [1] |
சுக்தேவ் சிங் திந்த்சா (Sukhdev Singh Dhindsa) இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார். பஞ்சாபில் 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 அன்று பிறந்தார். இதற்கு முன்பு இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) அரசியல் கட்சியின் அரசியல்வாதியான சுக்தேவ் பஞ்சாபின் சங்க்ரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2000 முதல் 2004 வரை வாஜ்பாய் மூன்றாவது அமைச்சரவையில் விளையாட்டுத்துறை, வேதியியல் மற்றும் உரங்களின் அமைச்சராக இருந்தாா். 1998 முதல் 2004 வரை இவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[2]. 1919 ஆம் ஆண்டு சுக்தேவ் சிங் திந்த்சாவிற்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.
இவரது மகன் பர்மீந்தர் சிங் திந்த்சா பஞ்சாப் நிதி மந்திரி ஆவார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sukhdev Singh Dhindsa proclaims himself as SAD chief. 8 July 2020. The Tribune. Retrieved 11 July 2020.
- ↑ "Sukhdev Singh Dhindsa Biography, Sukhdev Singh Dhindsa Bio, Sukhdev Singh Dhindsa Photos, Videos, Wallpapers, News". Archived from the original on 2014-12-13. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.