கள்ளம் அஞ்சி ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கள்ளம் அஞ்சி ரெட்டி
Dr.AnjiReddy.jpg
பிறப்பு1940
தாடேபள்ளி, குண்டூர் மாவட்டம்
இறப்புமார்ச்சு 15, 2013 (அகவை 73)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதலைவர், டாக்டர். ரெட்டீசு லாபரேட்டரி
அறியப்படுவதுடாக்டர். ரெட்டீசு லாபரேட்டரி
சொத்து மதிப்பு(USD) $1.39 பில்லியன்

கள்ளம் அஞ்சி ரெட்டி (Kallam Anji Reddy, தெலுங்கு:కళ్ళం అంజి రెడ్డి) (1940 - மார்ச்சு 15, 2013) ஓர் இந்திய மருந்துத்துறை தொழில்முனைவரும் டாக்டர். ரெட்டீசு லாபரேட்டரியின் நிறுவனர்-தலைவரும் ஆவார். இந்த நிறுவனத்தை 1984ஆம் ஆண்டில் நிறுவினார். இவரது முயற்சிகளால் இந்தியாவில் மருந்துகளின் விலைக் குறையத் தொடங்கியதுடன் அதுவரை மூலக்கூறுகளை இறக்குமதி செய்து வந்த நிலை மாறி ஏற்றுமதி செய்யும் நிலைக்கு இந்தியா முன்னேறியது. மருந்துத் துறையில் இவரது முதன்மையான முயற்சிகளை பாராட்டும் வண்ணம் இந்திய அரசு 2011இல் இவருக்கு பத்ம பூசன் விருது வழங்கியுள்ளது.

இவரது நிறுவனத்தின் நிறுவனங்களின் சமூக பொறுப்பாற்றல் கடமையாக 1996இல் டாக்டர் ரெட்டீசு பவுண்டேசனை நிறுவினார்.[1][2] இந்தியப் பிரதமரின் வணிக மற்றும் தொழில்துறை குழுவில் உறுப்பினராக இருந்தார்.[3]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளம்_அஞ்சி_ரெட்டி&oldid=3238949" இருந்து மீள்விக்கப்பட்டது