அசோக சென்
| அசோக் சென் | |
|---|---|
2019-இல் அசோக சென் | |
| பிறப்பு | 1956 (அகவை 69–70) |
| தேசியம் | இந்தியர் |
| துறை | இயற்பியல் |
| பணியிடங்கள் | பெர்மி ஆய்வகம் இசுட்டான்போர்டு நேர்கோட்டுத் துகள் முடுக்க மையம் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம் அரீசு சந்திரா ஆய்வு நிறுவனம் |
| கல்வி கற்ற இடங்கள் | மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் இசுட்டோனி புரூக் பல்கலைக்கழகம் |
| ஆய்வு நெறியாளர் | சியார்ச்சு இசுத்தெமன் |
அசோக சென் (Ashoke Sen) (பிறப்பு: 1956), (அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர்) ஓர் இந்தியக் கோட்பாட்டு இயற்பிலாளர் ஆவார். பெங்களூருவில் உள்ள சர்வதேச கோட்பாட்டு அறிவியல் மையத்தின்-இன்ஃபோசிஸ் மாதவப் பேராசிரியராக இருக்கிறார்.[1] பிரயாக்ராஜில் உள்ள அரீசு-சந்திரா ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் புகழ்பெற்ற பேராசிரியராவார்.[2] மேலும் அவர், இந்தியாவின் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கௌரவ உறுப்பினராகவும் உள்ளார்.[3] மேலும் இவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் மார்னிங்ஸ்டார் வருகைப் பேராசிரியராகவும், கொரியா மேம்பட்ட ஆய்வுக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகவும் உள்ளார். இவருடைய முக்கியப் பணித்துறை சரக் கோட்பாடு ஆகும். "அனைத்து சரக் கோட்பாடுகளும் ஒரே அடிப்படைக் கோட்பாட்டின் வெவ்வேறு எல்லைகளே என்ற உணர்தலுக்கான பாதையைத் திறந்ததற்காக" அடிப்படை இயற்பியலுக்கான திருப்புமுனைப் பரிசைப் பெற்ற முதல் நபர்களில் இவரும் ஒருவர்.[4]
1975 ஆம் ஆண்டு அசோக சென் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளநிலைப் பட்டம் பெற்றார், அதன்பின்பு மூன்றான்டுகள் கழித்து கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். இவர் தன்னுடைய முனைவர் பட்டத்தை அமெரிக்காவில் நியூ யார்க்கு மாநிலத்தில் உள்ள இசுட்டோனி புரூக்கு பல்கலைக்கழகத்தில் 1982 இல் பெற்றார். அதன் பின் மூன்றாண்டுகள் வெர்மி ஆய்வகத்திலும், மேலும் இரண்டரை ஆண்டுகள் இசுடான்போர்டு நேர்கோடு துகள்முடுக்க நடுவகத்திலும் டாட்டா அடிப்படை ஆராய்சிக் கழகத்தில் சேர்ந்தார். 1995 இல் அரீசு சந்திரா ஆராய்ச்சி நிறுவனத்தில் முழுநேரப் பேராசிரியராகப் பணியேற்றார். 1988-க்கும் 2003-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், ஐக்கிய இராச்சியத்தில் கேம்பிரிட்சில் உள்ள ஐசாக்கு நியூட்டன் கல்விக்கழகத்தில் இராத்துச்சைல்டு வருகைப் பேராசிரியராகவும், 2003, 2004 ஆம் ஆண்டுகளில் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலைத்தில் மார்னிங்சிட்டார் வருகைப் பேராசிரியராகவும் இருந்தார். இவர் அரீசு சந்திரா ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய முனைவர் சுமதி இராவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
பெருமைகளும் பரிசுகளும்
[தொகு]அசோக் சென் 1989 இல் அப்துஸ் சலாம் சர்வதேச கோட்பாட்டு இயற்பியல் மையம் வழங்கும் பரிசாகிய ஐ.சி.டி.பி பரிசை வென்றார்[5], பின்னர் 1994 இல் சாந்தி சொரூப்பு பட்நாகர் பரிசை வென்றார்; 2001-ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மசிறீ பெருமைப்பட்டமும், 1998-இல் ஐக்கிய இராச்சியத்தில் அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர் ஆனார். 2009 ஆம் ஆண்டு கணிதவியலுக்கான இன்போசிசுப் பரிசு பெற்றார்.
உருசிய இயற்பியலாளரும் தொழில்முனைவோருமான இயூரி மில்னர் இயற்பியலுக்காக உருவாக்கிய அடிப்படை இயற்பியல் இயூரி மில்னர் பரிசை]ஆகத்து 1, 2012 இல் வென்றார்[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ashoke Sen | ICTS". www.icts.res.in. Retrieved 10 June 2023.
- ↑ Pulakkat, Hari (19 December 2013). "How many of us know about Breakthrough Prize winner, Ashoke Sen?". தி எகனாமிக் டைம்ஸ். https://economictimes.indiatimes.com/opinion/et-commentary/how-many-of-us-know-about-breakthrough-prize-winner-ashoke-sen/articleshow/27612815.cms.
- ↑ "School of Physical Sciences". National Institute of Science Education and Research. Retrieved 4 September 2019.
- ↑ "Breakthrough Prize - Fundamental Physics Breakthrough Prize Laureates - Ashoke Sen". breakthroughprize.org. Retrieved 17 June 2020.
- ↑ "ICTP Prize Winner 1989". Retrieved 2009-11-17.
- ↑ New annual US$3 million Fundamental Physics Prize recognizes transformative advances in the field பரணிடப்பட்டது 2012-08-03 at the வந்தவழி இயந்திரம், FPP, accesed 1 August 2012
- Thomson Honours Leading Indian Scientists பரணிடப்பட்டது 2007-03-12 at the வந்தவழி இயந்திரம் Five people receive the "Thomson Citation Laureate Award", including physics professor Ashoke Sen of the Harish-Chandra Research Institute.
- The Hindu, Sunday, January 7, 2001: Stringing together the ultimate law பரணிடப்பட்டது 2010-08-11 at the வந்தவழி இயந்திரம் States that Dr. Ashoke Sen of HRI has "made several important contributions to the சரக் கோட்பாடு".
வெளி இணைப்புகள்
[தொகு]- Home page
- Ashoke Sen CV
- "Thomson Honours Leading Indian Scientists" பரணிடப்பட்டது 12 மார்ச் 2007 at the வந்தவழி இயந்திரம்
- The Hindu, Sunday, January 7, 2001: "Stringing together the ultimate law"
- "Profile of Top 25 scientists in India". India Today. 11 September 2011. https://www.indiatoday.in/india/photo/profile-of-top-25-scientists-in-india-366262-2011-09-11.
பொதுவகத்தில் Ashoke Sen (physicist) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.