தேவிபிரசாத் திவிவேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவிபிரசாத் திவிவேதி
பிறப்புOctober 20, 1956 (1956-10-20) (வயது 67)
வாரணாசி, உத்தா பிரதேசம், இந்தியா
பணிகல்வியாளர், எழுத்தாளர்
விருதுகள்பத்மசிறீ
ஆச்சாரிய ரத்னா
சத்ரபதி சிவாஜி சம்மான்
காசி கவுரவ அலங்காரன்

வேத பண்டிதர் விருது

தேவிபிரசாத் துவிவேதி, இந்திய எழுத்தாளரும், சமசுகிருத இலக்கியவாதியும் ஆவார்.[1] 2011ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதினை வழங்கி சிறப்பித்தது.[2]

வாழ்க்கைக்குறிப்பு[தொகு]

இவர் 1956ஆம் ஆண்டில் அக்டோபர் இருபதாம் நாளில், வாரணாசியில் பிறந்தார்.[3] சமூகவியலுக்கான முதுநிலைப் பட்டத்தை வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் பெற்றார். பின்னர், சம்பூர்ணானந்து சமசுகிருத பல்கலைக்கழகத்தில் சாகித்யாச்சாரியா, ஆச்சாரியா ஆகிய பட்டங்களை பெற்றார். இந்த பல்கலையில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3]

பின்னர், இதே பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேராசிரியராக சேர்ந்தார்.[4] பவுத தர்சன் மீமான்சா, சித்ர சம்பு காவ்யச சசமிக்சம் சம்பதனம், சமசுகிருத துவனி விஞ்ஞான், காவ்ய சாஸ்திரீய பரிபாஷிக் சப்தோன் கி நிருக்தி[5] உள்ளிட்டவற்றை இயற்றியுள்ளார்.

இவர் ஆச்சாரிய ரத்னா, வேத பண்டிதர் விருது, சத்ரபதி சிவாஜி சம்மான், காசி கவுரவ அலங்காரன், பத்மசிறீ, பத்மபூசண் உள்ளிட்ட விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார்.[3][6]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "PM India". Prime Minister's Office. November 8, 2014. பார்க்கப்பட்ட நாள் November 27, 2014.
  2. "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014.
  3. 3.0 3.1 3.2 "SSUV" (PDF). SSUV. 2014. பார்க்கப்பட்ட நாள் November 27, 2014.
  4. "TOI". TOI. January 26, 2011. பார்க்கப்பட்ட நாள் November 27, 2014.
  5. Deviprasad Dwivedi (2007). Kavyashastriy Paribhashik Shabdon ki Nirukti. Sampurnanand Sanskrit University. http://www.amazon.co.uk/Kavyashastriy-Paribhashik-Shabdon-Nirukti/dp/B00KLFBXYQ/ref=la_B00M8TALH8_1_1?s=books&ie=UTF8&qid=1417102044&sr=1-1. 
  6. 3 from Kashi make it to Padma list - Times of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவிபிரசாத்_திவிவேதி&oldid=3559492" இலிருந்து மீள்விக்கப்பட்டது