பழமையான தமிழ்மொழி
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி பழந்தமிழ் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
Old Tamil | |
---|---|
பிராந்தியம் | தமிழகம், Ancient India |
ஊழி | Developed into Middle Tamil by the 8th century |
தமிழ்ப் பிராமி, later வட்டெழுத்து and the பல்லவ எழுத்துமுறை | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | oty |
மொழிசார் பட்டியல் | oty Old Tamil |
மொழிக் குறிப்பு | oldt1248 (Old Tamil)[1] |
கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம் தமிழ்மொழியின் பழைய காலமாகும்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரையுள்ள பழைய தமிழ்க்காலம் குகைகள் மற்றும் மட்பாண்டங்களில் இருந்து அறியப்படுகிறது. இங்கு பிராமி எழுத்து வடிவத்தில் உள்ள கல்வெட்டுகள் தமிழ் பிராமி என்று அழைக்கப்படுகின்றன. பழைய தமிழில் மிக நீண்ட உரை, தாெல்காப்பியத்தில் காணப்படுகிறது. இது தமிழ் இலக்கணம் மற்றும் கவிதைகளின் ஆரம்பகால தாெகுப்பாகும். அதன் கருத்துக்கள் கி.மு. 1 ஆம் நூற்றாண்டைவிட பழமையானது. பழைய தமிழில் ஏராளமான இலக்கிய படைப்புகளும் தப்பிப்பிழைத்திருக்கின்றன. சங்க இலக்கியங்கள் என்று மொத்தமாக 2,381 கவிதைகள் உள்ளன. இந்த கவிதைகள் வழக்கமாக கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 5-ஆம் நூற்றாண்டு வரையுள்ள நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறது. அக்காலத்தில்தான் மதச்சார்பற்ற இலக்கியங்கள் அதிகமாக இருந்திருக்கின்றன. பழைய தமிழ் மொழியில் உள்ள மற்ற இலக்கிய படைப்புகள் திருக்குறள், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை பாேன்றவை. இவை 5 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்ட நெறிமுறை மற்றும் நாகரிக நூல்களாகும்.
மேற்காேள்கள்[தொகு]
- ↑ Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "Old Tamil". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/oldt1248.