இராமதாசர்
சத்ரபதி சிவாஜியின் குரு சமர்த்த ராமதாசர் ஆவார். [1]
வெங்கோஜி
[தொகு]சத்ரபதி சிவாஜி தன் குருவான சமர்த்த ராமதாசரிடம் சென்று தஞ்சையை ஆட்சி செய்த தன் சகோதரன் வெங்கோஜிக்கு அருள் செய்ய வேண்டினார். அதன்படி கி.பி.1677இல் சமர்த்த ராமதாசர் ராமேஸ்வரத்திற்கு தலப்பயணம் சென்றபோது மன்னார்குடியில் தங்கினார். அதனை அறிந்த வெங்கோஜி மன்னர் அவரை நேரில் சென்று பார்த்து தஞ்சைக்கு வந்து தங்கி அருளாசி வழங்க வேண்டினார்.[1]
ஆசி தரல்
[தொகு]மன்னரின் வேண்டுகோளை ஏற்று அவர் தஞ்சாவூருக்கு வந்தார். வெங்கோஜி மன்னர் அவருக்கு தஞ்சையின் கிழக்கே அமைந்துள்ள சாமந்தான் குளத்தின் கீழ்க்கரையில் அவருக்கு இடம் அமைத்து தகுந்த மரியாதைகளைச் செய்து தனக்கு அருள் வழங்க வேண்டினார். அவரும் அருள் செய்து ஆன்மீகத்தை மன்னருக்கு போதித்தார். சில நாள்கள் அவர் தஞ்சாவூரில் தங்கினார். பின்னர் ராமேஸ்வரம் சென்றார்.[1]
பெயரும் புகழும்
[தொகு]தஞ்சாவூரில் சமர்த்த ராமதாசர் நிறுவிய சம்பிரதாய மடமும், பீமசுவாமிகள் சமாதி மீது அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலும் ராமதாசரின் புகழை நிலை பெறச் செய்துள்ளது.[1]